மே 14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | மே 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXIII | ||||||
மே 14 கிரிகோரியன் ஆண்டின் 134ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 135ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 231 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1264 - இங்கிலாந்தின் இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி பிரான்சில் கைது செய்யப்பட்டான்.
- 1610 - பிரான்சின் நான்காம் ஹென்றி மன்னன் கொலை செய்யப்பட்டான். பதின்மூன்றாம் லூயி முடி சூடினான்.
- 1643 - பதின்மூன்றாம் லூயி இறக்க, அவனது 4-வயது மகன் பதினான்காம் லூயி இரான்சின் மன்னனானான்.
- 1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.
- 1811 - பராகுவாய் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1861 - ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.
- 1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.
- 1900 - கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.
- 1931 - சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 1939 - பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்து ஜெர்மனியிடம் சரணடைந்தது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியாவின் செண்டோர் என்ற மருத்துவக் கப்பல் குயின்ஸ்லாந்துக்கருகில் ஜெர்மன் நீர்மூழ்கிக்கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் கொல்லப்பட்டனர்.
- 1948 - இஸ்ரவேல் நாடு தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின.
- 1955 - பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு நாடுகள் சேர்ந்து வார்சா ஒப்பந்தம் எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன.
- 1965 - இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.
- 1973 - ஸ்கைலாப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் சட்டர்ன் 5 விண்கப்பலில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1976 - யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.
- 2004 - டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த "மேரி டொனால்ட்சன்" என்னும் பெண்ணை திருமணம் புரிந்தார்.
பிறப்புக்கள் [தொகு]
- 1907 - அயுப் கான், பாகிஸ்தான் அதிபர் (இ. 1974)
- 1944 - ஜோர்ச் லூகாஸ், திரைப்பட இயக்குனர்
- 1948 - பொப் வூல்மர், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியின் பயிற்றுநர் (இ. 2007)
- 1953 - நொரொடாம் சிகாமணி, கம்போடியாவின் மன்னர்
இறப்புகள் [தொகு]
- 1574 - குரு அமர் தாஸ், மூன்றாவது சீக்கிய குரு (பி. 1479)
- 1837 - ஆ. குமாரசாமிப்பிள்ளை (பி. 1784)