பருத்தித்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பருத்தித்துறை
பருத்தித்துறை
පේදුරු තුඩුව
பருத்தித்துறை is located in Sri Lanka
பருத்தித்துறை
அமைவு: 9°49′0″N 80°14′0″E / 9.81667, 80.23333
நாடு இலங்கை
மாகாணம் வட மாகாணம்
மாவட்டம் யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவு வடமராட்சி வடக்கு
பரப்பளவு
 - நகரம் 11.65 கிமீ²  (4.5 ச. மைல்)
மக்கள் தொகை (2007)
 - நகரம் 20
 - அடர்த்தி 1/கிமீ² (4/சதுர மைல்)
நேர வலயம் இலங்கைச் சீர் நேரம் (ஒ.ச.நே.+5:30)

பருத்தித்துறை இலங்கையின் வடபகுதி அந்தலையில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஒரு சிறிய துறைமுகத்தையும் கொண்டுள்ளது.1995 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இந்த நகரம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. பருத்தித்துறை 100% தமிழர்கள் வாழும் நகரமாகும்.நகரின் பெரும்பகுதி உயர் பாதுகாப்பு வலயத்துள் அடங்குவதால் அப்பகுதிகளில் மக்கள் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.அண்மையில் ஏற்பட்ட சுனாமியால் இந்த நகரமும் பாதிக்கப்பட்டது.ஹாட்லிக் கல்லூரி இங்கு அமைந்துள்ளது.


பொருளடக்கம்

[தொகு] வரலாறு

ஆரம்ப காலங்களில் பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக தொழிற்பட்டது. இதனால் பருத்தித்துறை என பெயர் பெற்றது. இதே வேளை ஒல்லாந்த மாலுமியான பெட்ரே இலங்கையின் கரையோரப் பிரதேசம் ஊடாகப் பயனிக்கும் போது இலங்கையின் வட முனையாக இந்த நகரம் இருப்பதைப் புரிந்துகொண்டார். இதன் பின்னர் இந்த நகரத்தன்கு பொயின்ட் பெட்ரோ (en: Point Pedro) எனப்பெயரிட்டார். இந்தப் பெயரே இன்று ஆங்கிலத்தில் புழங்கி வருகின்றது.

காலம் காலமாக இவ்வூரில் உள்ள பிரபலமான பாடசாலையான ஹாட்லிக் கல்லூரி பல மாணவர்களை பல்கலைக் கழகம் அனுப்பி வருகின்றது. ஆரம்ப காலங்களில் தென் இலங்கையில் இருந்து சிங்கள மாணவர்கள் இந்தக் கல்லூரியில் படிப்பதற்காக இந்த நகரிற்கு வந்தனர். ஆயினும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்தப் பாடசாலை தனது செல்வாக்கை இழந்தது. ஆயினும் தொடர்ந்தும் இந்த பாடசாலையின் மாணவர்கள் கணித துறையில் அகில இலங்கை ரீதியில் சாதனை புரிந்து வருகின்றனர்.

[தொகு] துறைமுகம்

ஆதி காலத்தில் தென்னிந்திய நகரங்களுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக விளங்கிய பருத்தித்துறை துறைமுகம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. தமிழீல விடுதலைப் புலிகளிடம் யாழ் குடாநாடு இருந்த போது யாழ்குடா நாட்டிற்கான கடல்வழி போக்குவரத்து இந்த துறைமுகம் ஊடாக நடந்தது. திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு பயனிகள் மற்றும் சரக்கு கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 1995இல் இலங்கை இராணுவம் தமிழீல விடுதலைப் புலிகளிடம் இருந்து பருத்தித்துறை நகரைக் கைப்பற்றியபோது இந்த துறைமுகமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் பொது மக்களை இந்த துறைமுகத்தைப் பாவிக்க இராணுவம் அனுமதித்து வருகின்றது.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த துறைமுகம் பரபரப்பான ஒரு துறைமுகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

[தொகு] கலைப் பங்களிப்பு

பருத்தித்துறையில் உள்ள மாதனைப்பகுதியில் பிரசித்திபெற்ற கொட்டகைக்கூத்து, இசைநாடகக் கலைஞர்கள் இருந்தார்கள். காத்தவராயர் என்னும் கூத்து தற்போதும் நடைபெற்று வருகின்றது.

[தொகு] ஆலயங்கள்

[தொகு] பாடசாலைகள்

[தொகு] சுவையான தகவல்கள்

  • பருத்தித்துறை நகர் தட்டை வடையைச் செய்வதில் சிறப்புப் பெற்றதால் இஇந்த வடைக்கு "பருத்தித்துறை வடை" என்று ஒரு காரணப் பெயர் உண்டு.
  • குத்து விளக்கு என்ற ஈழத்துத் திரைப்படத்தின் படப்படிப்பு இங்குதான் பெரும்பகுதி நடைபெற்றது.
  • எஸ். பொன்னுத்துரையின் "சடங்கு" நாவலின் கதைக்களமும் பருத்தித்துறைதான்.

[தொகு] இங்கு பிறந்த புகழ் பூத்தவர்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] பருத்தித்துறை

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பருத்தித்துறை&oldid=1105937" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்