இலங்கை சீர் நேரம்
இலங்கை சீர் நேரம் (SST அல்லது இ.சீ.நே.) UTC+5:30 என்ற நேர வித்தியாசத்துடன் இலங்கை தீவு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் நேர முறைமையாகும். இம்முறையின் கீழ் கோடைக்கால நேரம் கடைப்பிடிக்கப்படுவது இல்லை.
1880 இல் இலங்கை சீர் நேரம் UTC+5:30 ஆகவும், 1942 சனவரி மாதம் இரண்டாம் உலகப் போரின் போது யப்பான் இலங்கையை ஆக்கிரமிக்க அண்மித்திருந்த போது இலங்கை சீர் நேரம் UTC+6:00 ஆகவும் 1942 செப்டம்பர் மாதம் UTC+6:30 ஆகவும் மாற்றப்பட்டது. போருக்குக் பின்னதாக 1945ஆம் ஆண்டு அது மீண்டு UTC+5:30க்கு மாற்றியமைக்கப்பட்டது.
1996 மே மாதம் இலங்கையில் அப்போது காணப்பட்ட மின்வழுப்பற்றாக்குறையை நீக்கும் வகையில் நேரம் UTC+6:30க்கு மாற்றப்பட்டது. 1996 ஆக்டோபர் மாதம் நேரம் UTC+6:00க்கு மாற்றப்பட்டது.
இலங்கை நேரப்படி 2006 ஏப்ரல் 15 ஆம் நாள் 00:00 மணியானபோது அது இந்திய சீர் நேரத்துடன் ஒன்றுமாறு மாற்றியமைக்கப்பட்டது. 1880 ஆம் ஆண்டு முதல் இலங்கை சீர் நேரம் UTC+5:30 முதல் UTC+6:00 வரை காலத்துக்கு காலம் மாற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போர் தவிர்த்த காலத்தில் இலங்கையில் கோடைக்கால நேரம் கடைப்பிடிக்கப்படுவதில்லை.