வடமராட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வடமராட்சி | |
|---|---|
| அமைவு: | |
| நாடு | |
| மாகாணம் | வடக்கு |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பெரிய நகரம் | பருத்தித்துறை |
| பிரதேசச் செயலாளர் பிரிவுகள் |
பட்டியல்
|
| பரப்பளவு | |
| - பிரிவு | 238.6 கிமீ² (92.1 ச. மைல்) |
| மக்கள் தொகை (2007) | |
| - பிரிவு | 1,06,179 |
வடமராட்சி (Vadamaraadchi அல்லது Vadamarachchi), என்பது இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஒரு புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குடாநாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது வடமராட்சிப் பிரிவாகும்.
வடமராட்சிப் பகுதி வடமாராட்சி வடக்கு (பருத்தித்துறை), வடமாராட்சி தென்மேற்கு (கரவெட்டி), மற்றும் வடமராட்சி கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பொருளடக்கம் |
பெயர்[தொகு]
வடமராட்சி என்பது "வடக்கு மக்களின் ஆட்சிப் பகுதி" என்பது பொருள். வடமார் என்பது வடக்கு மக்களைக் குறிக்கும்[1]. இங்கு வசிக்கும் மக்கள் வடமராட்சியார் என அழைக்கப்படுகின்றனர்.
வடமாராட்சியில் உள்ள ஊர்கள்[தொகு]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Vadamaraadchi". TamilNet. 22 January 2009. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=27701.