நவம்பர் 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | நவம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| MMXIII | ||||||
நவம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 327வது நாளாகும். நெட்டாண்டுகளில் 328வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 38 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 800 - திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் ஷார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான்.
- 1227 - போலந்து இளவரசன் முதலாம் லெஸ்செக் படுகொலை செய்யப்பட்டான்.
- 1248 - காஸ்டிலின் மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவில் நகரைக் கைப்பற்றினர்.
- 1499 - இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் நான்காம் எட்வேர்ட்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.
- 1867 - இரண்டு ஐரியர்களைச் சிறையிலிருந்து வெளியேற உதவியமைக்காக மூன்று ஐரியத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
- 1890 - நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்ஹெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
- 1936 - முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.
- 1955 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.
- 1971 - மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
- 1978 - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
- 1979 - மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
- 1980 - தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 4,800 பேர் கொல்லப்பட்டனர்.
- 1985 - எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990 - ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.
- 1996 - எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
- 1998 - கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- 2003 - வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ பதவி விலகினார்.
- 2005 - லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.
- 2007 - அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது
- 2007 - ஆர்ஜெண்டீனாவுக்குத் தெற்கோ பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 154 பெர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- 1973 - வி. அ. அழகக்கோன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
- 1990 - ரூவால் டால், ஆங்கில எழுத்தாளர் (பி. 1916)
- 1990 - லெப்டினன்ட் கேணல் போர்க், விடுதலைப் புலிகளின் மாவீரர் (பி. 1959)