ஜனவரி 9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சனவரி 9 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | சனவரி 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
ஜனவரி 9 கிரிகோரியன் ஆண்டின் 9வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 356 (நெட்டாண்டுகளில் 357) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 475 - பைசண்டைன் பேரரசன் சீனோ அவனது தலைநகரான கொன்ஸ்டண்டீனப்போல் நகரை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டான்.
- 1431 - ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
- 1707 - ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
- 1760 - ஆப்கானியர்கள் மரதர்களைத் தோற்கடித்தனர்.
- 1768 - பிலிப் ஆஸ்ட்லி என்பவர் முதன் முதலாக நவீன சர்க்கஸ் காட்சியை லண்டனில் நடத்தினார்.
- 1788 - கனெடிகட் 5வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
- 1793 - ஜான் பியர் பிளன்சார் வாயுக்குண்டில் பறந்த முதல் அமெரிக்கர் ஆனார்.
- 1799 - பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் நெப்போலியனுக்கெதிரான போருக்கு நிதி சேர்ப்பதற்காக வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.
- 1816 - ஹம்பிறி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.
- 1857 - கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது.
- 1858 - டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது.
- 1878 - இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினான்.
- 1905 - ரஷ்யத் தொழிலாளர் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் குளிர்கால அரண்மனையை முற்றுகையிட்டனர். சார் மன்னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்றனர் (ஜூலியன் நாட்காட்டியின் படி). இந்நிகழ்வே 1905 ரஷ்யப் புரட்சி ஆரம்பமாவதற்கு வழிகோலியது.
- 1916 - முதலாம் உலகப் போர்: ஒட்டோமான்களின் வெற்றியுடன் கலிப்பொலி நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
- 1921 - புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.
- 1951 - ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
- 1964 - மாவீரர் நாள்: பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.
- 1972 - ஹொங்கொங்கில் குயீன் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது.
- 1974 - யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.
- 1986 - பொலரொயிட் உடன் காப்புரிமப் பிரச்சினை முறிவடைந்ததைத் தொடர்ந்து கொடாக் நிறுவனம் உடனடி படம்பிடிகருவி தயாரித்தலை நிறுத்தியது.
- 1990 - நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.
- 1991 - லித்துவேனியாவின் விடுதலைக் கோரிக்கையை நசுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வில்னியூஸ் நகரை முற்றுகையிட்டது.
- 2001 - சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.
- 2005 - சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கென்யாவில் கைச்சாத்திடப்பட்டது.
பிறப்புகள்[தொகு]
- 1868 - சோரென்சென், டென்மார்க் வேதியியலாளர் (இ. 1939)
- 1908 - சிமோன் ட பொவார், பிரெஞ்சுப் பெண் எழுத்தாளர் (இ. 19886)
- 1913 - ரிச்சர்ட் நிக்சன், ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1994)
- 1917 - டி. ஆர். ராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர்
- 1922 - ஹார் கோவிந்த் கொரானா, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இந்தியர்
- 1927 - துரைசாமி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (இ. 1971)
- 1934 - மகேந்திர கபூர், இந்தித் திரைப்படப் பாடகர் (இ. 2008)
- 1959 - ரிகொபேர்ட்டா மென்ச்சு, நோபல் பரிசு பெற்ற கௌதமாலா எழுத்தாளர்
- 1989 - மைக்கல் பீஸ்லி, அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
இறப்புகள்[தொகு]
- 1873 - மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (பி. 1808)
- 1924 - சேர் பொன்னம்பலம் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர் (பி. 1853)
- 1961 - எமிலி பால்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1867)
- 1998 - கெனிச்சி ஃபூக்கி, நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய வேதியியலாளர் (பி. 1918)