அகமது ஷா துரானி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அஹமது ஷா துரானி | |
|---|---|
| Shah, Emir | |
| Ahmad-Shah-Durani.jpeg | |
| A modern painting of Ahmad Shah Durrani | |
| ஆட்சிக்காலம் | 1747–1772 |
| முடிசூட்டு விழா | October 1747 |
| முழுப்பெயர் | Ahmad Khan Abdali |
| பட்டங்கள் | Padshah, Ghazi, Bahadur, Dur-i-Durran (Pearl of Pearls) |
| பிறப்பு | 1722 |
| பிறப்பிடம் | Herat, Afghanistan |
| இறப்பு | 1773 (அகவை 50–51) |
| இறந்த இடம் | Kandahar Province, Afghanistan |
| முன்னிருந்தவர் | Hussain Hotaki |
| பின்வந்தவர் | Timur Shah Durrani |
| அரச குடும்பம் | Durrani |
| அரச வம்சம் | Durrani Empire |
| தந்தை | Muhammad Zaman Khan Abdali |
| தாய் | Zarghuna Alakozai |
| சமய நம்பிக்கைகள் | Sunni Islam |
அகமது ஷா துரானி கி.பி.1722–1773 ஆப்கானிஸ்தானத்தில் முதல் அமீர் ஆவார். இவர் அப்தாலி இனத்தின் தலைவர். மற்ற ஆப்கானிய தலைவர்களைவிட இவர் மிகுந்த செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார்.[1][2][3][4] அப்போது ஆப்கானிஸ்தான் பாரசீகத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
பாரசீகத்தின் நாதர் ஷா கொலையுண்ட போது (கி.பி.1747) ஆப்கானிய தலைவர்கள் தங்களை விடுதலை பெற்றவர்களாக அறிவித்து அகமதுவை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் அவர் தம் இனப் பெயரான 'அப்தாலி' என்பதை மாற்றி 'துரானி' என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டார். இவரது ஆட்சியின்போது டில்லியில் வலுவற்றிருந்த மொகலாயப் பேரரசைப் பலமுறை தாக்கி லாகூர், காஷ்மீர் போன்ற பகுதிகளை கி.பி. 1748- ஆம் ஆண்டில் கைப்பற்றினார். டில்லி நகரம் கி..பி. 1756 - இல் இவரால் சூறையாடப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Aḥmad Shah Durrānī". Encyclopædia Britannica Online Version (2010). பார்த்த நாள் 2010-08-25.
- ↑ "Ahmad Shah and the Durrani Empire". Library of Congress Country Studies on Afghanistan (1997). பார்த்த நாள் 2010-09-23.
- ↑ Friedrich Engels (1857). "Afghanistan". Andy Blunden. The New American Cyclopaedia, Vol. I. பார்த்த நாள் 2010-09-23.
- ↑ Clements, Frank (2003). Conflict in Afghanistan: a historical encyclopedia. ABC-CLIO. p. 81. ISBN 9781851094028. http://books.google.com/books?id=bv4hzxpo424C&lpg=PP1&pg=PA81#v=onepage&q&f=false. Retrieved 2010-09-23.