பெப்ரவரி 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | பெப்ரவரி 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | ||
| MMXIII | ||||||
பெப்ரவரி 5 கிரிகோரியன் ஆண்டின் 36 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 329 (நெட்டாண்டுகளில் 330) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 62 – இத்தாலியின் பொம்பெய் நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது.
- 1597 - ஜப்பானின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1649 - ஸ்கொட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.
- 1778 – தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது.
- 1782 - ஸ்பானியர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மினோர்க்கா தீவைக் கைப்பற்றினர்.
- 1782 - ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
- 1885 - பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.
- 1900 - பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.
- 1922 - றீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
- 1958 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையினரால் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.
- 1958 – ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக கமல் அப்துல் நாசர் நியமிக்கப்பட்டார்.
- 1960 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.
பிறப்புகள்[தொகு]
- 1914 - அலன் ஹொட்ஜ்கீன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1998)
- 1915 - ராபர்ட் ஹொஃப்ஸ்டாட்டர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1990)
- 1976 - அபிஷேக் பச்சன், இந்தி நடிகர்
இறப்புகள்[தொகு]
- 1898 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழ் அறிஞர் (பி. 1838)
- 1999 - வசீலி லியோன்டியெஃப், நோபல் பரிசு பெற்ற ரசியப் பொருளியலாளர் (பி. 1906)
- 2008 - மகேஷ் யோகி, இந்திய ஆன்மிகக் குரு ((பி. 1917)
சிறப்பு நாள்[தொகு]
- பாகிஸ்தான் - காஷ்மீர் நாள்