ஆகஸ்டு 6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆகத்து 6 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | ஆகஸ்ட் 2012 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXII | ||||||
ஆகஸ்ட் 6 கிரிகோரியன் ஆண்டின் 218வது நாளாகும். நெட்டாண்டுகளில் 219வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 147 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1661 - போர்த்துக்கல்லுக்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.
- 1806 - கடைசி புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.
- 1825 - பொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.
- 1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் 10 கடற்படை படகுகள் பிரித்தானியப் படகுகளைத் தாக்கவென வட கடலை நோக்கிப் புறப்பட்டன.
- 1914 - முதலாம் உலகப் போர்: சேர்பியா ஜேர்மனி மீதும் ஆஸ்திரியா ரஷ்யா மீதும் போரை அறிவித்தன.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.
- 1952 - இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது.
- 1960 - கியூபா புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.
- 1961 - வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மொன் டீட்டொவ் பெற்றார்.
- 1962 - ஜமெய்க்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1964 - அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியஸ் என்ற மரம் வெட்டப்பட்டது.
- 1990 - இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் இடத்தில் பெண்கள், முதியவர்கள் உட்பட 47 தமிழர்கள் இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1991 - உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.
- 1996 - செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.
- 1997 - வட கொரிய போயிங் விமானம் ஒன்று குவாமில் வீழ்ந்ததில் 228 பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 - தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
- 2006 - திருகோணமலையில் நோயாளரை ஏற்றி வந்த ஆம்பியூலன்ஸ் வண்டி எறிகணைத் தாக்குதலுக்குள்ளானதில் ஒரு நோயாளி கொல்லப்பட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1881 - அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (இ. 1955)
- 1970 - எம். நைட் ஷியாமளன், ஹாலிவுட் இயக்குனர்
[தொகு] இறப்புகள்
- 1978 - திருத்தந்தை ஆறாம் பவுல் (பி. 1897)
- 2009 - முரளி, மலையாள நடிகர் (பி. 1954)
[தொகு] சிறப்பு நாள்
- பொலீவியா - விடுதலை நாள் (1825)
- ஜமெய்க்கா - விடுதலை நாள் (1962)
- ஜப்பான் - டோரோ நாகாஷி - ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவு நாள்.