ஜூன் 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூன் 29 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | சூன் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||
| MMXIII | ||||||
ஜூன் 29 கிரிகோரியன் ஆண்டின் 180ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 181ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1534 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1613 - லண்டனில் உள்ள குளோப் நாடகமாளிகை தீயில் எரிந்து அழிந்தது.
- 1786 - அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் ஸ்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.
- 1814 - மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.
- 1850 - வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.
- 1864 - கனடாவில் கியூபெக்கில் தொடருந்து விபத்தில் 99 பேர் கொல்லப்பட்டனர்.
- 1880 - பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது.
- 1904 - மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.
- 1914 - கிரிகோரி ரஸ்புட்டீன் சைபீரியா நகரில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் தப்பினார்.
- 1925 - கலிபோர்னியாவில் 6.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் சாண்டா பார்பரா என்ற இடம் முற்றாக அழிந்தது.
- 1976 - சிஷெல்ஸ் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விடுதலை அடைந்தது.
- 1995 - அட்லாண்டிஸ் விண்ணோடம் ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதற்தடவையாக இணைந்தது.
- 1995 - தென் கொரியாவின் சியோலில் சம்பூங் பல்பொருள் அங்காடி இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் கொல்லப்பட்டு 937 பேர் படுகாயமடைந்தனர்.
- 2002 - தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் இடம்பெற்ற கடல் மோதலில் ஆறு தென் கொரிய மாலுமிகள் கொல்லப்பட்டு ஒரு வட கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- 1945 - சந்திரிகா குமாரதுங்க, இலங்கையின் நான்காவது அதிபர்
- 1981 - ஜோ ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 2009 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (பி. 1926)