ஏப்ரல் 16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| << | ஏப்ரல் 2008 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||
| MMVIII | ||||||
ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டின் 106ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 107ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1346 - தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய சேர்பியப் பேரரசு டுசான் சில்னி என்பவனால் உருவாக்கப்பட்டது.
- 1444 - இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
- 1582 - ஸ்பானிய ஆக்கிரமிப்பாளன் ஹெர்னாண்டோ டி லேர்மா என்பவன் ஆர்ஜெண்டீனாவின் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தான்.
- 1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1876 - பல்கேரியாவில் ஒட்டோமான் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.
- 1885 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
- 1912 - ஹரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.
- 1917 - நாடு கடந்த நிலையில் பின்லாந்தில் இருந்த விளாடிமிர் லெனின் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார்.
- 1919 - அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.
- 1925 - பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: செம்படையினர் ஜெர்மனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1947 - ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் துறைமுகத்தில் நிற சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் கொல்லப்பட்டனர்.
- 1947 - சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பேர்னார்ட் பரெக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.
- 1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
- 1972 - நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 2007 - ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.
[தொகு] பிறப்புகள்
- 1844 - அனத்தோலி பிரான்ஸ், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1924)
- 1851 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)
- 1867 - வில்பர் ரைட், முதன்முதலில் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1912)
- 1889 - சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977)
- 1927 - பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது பாப்பரசர்
- 1935 - சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)
- 1947 - கரீம் அப்துல்-ஜப்பார், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
- 1957 - பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி
- 1985 - லுவால் டெங், பிரித்தானிய கூடைப்பந்து ஆட்டக்காரர்
[தொகு] இறப்புகள்
- 1908 - அப்புக்குட்டி கிங்ஸ்பரி, யாழ்ப்பாணக் கல்லூரியின் கணிதவியல் பேராசிரியர்.
- 1972 - யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர் (பி. 1899)

