சூலை 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சூலை 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
| MMXIII | ||||||
சூலை 19 கிரிகோரியன் ஆண்டின் 200வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 201வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1545 - இங்கிலாந்தின் "மேரி றோஸ்" என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்" என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர்.
- 1553 - 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள்.
- 1870 - பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது.
- 1900 - பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.
- 1912 - அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.
- 1947 - பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.
- 1967 - வட கரோலினாவில் போயிங் 727 மற்றும் செஸ்னா 310 விமானங்கள் நடுவானில் மோதியதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
- 1979 - நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
- 1980 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.
- 1985 - இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் கொல்லப்பட்டனர்.
- 1996 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.
- 1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
பிறப்புகள் [தொகு]
- 1827 - மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் (இ. 1857)
- 1893 - விளாடிமீர் மயகோவ்ஸ்கி, ரஷ்யக் கவிஞர் (இ. 1930)
- 1938 - ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர்
- 1979 - தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப் பநது வீச்சாளர்
- 1979 - மாளவிகா, தமிழ்த் திரைப்பட நடிகை
இறப்புகள் [தொகு]
- 1947 - சுவாமி விபுலாநந்தர், தமிழிசை ஆய்வாளர் (பி. 1892)
- 1947 - ஓங் சான், பர்மிய தேசியவாதி (பி. 1915)
- 1987 - ஆதவன், தமிழ் சிறுகதை எழுத்தாளர் (பி. 1942)
சிறப்பு நாள் [தொகு]
- மியான்மார் - பர்மிய மாவீரர் நாள்
- நிக்கரகுவா - தேசிய விடுதலை நாள் (1979)