ஓக்ரம் இபோபி சிங்
| ஓக்ரம் இபோபி சிங் | |
|
11வது மணிப்பூர் முதலமைச்சர்
|
|
|---|---|
| பதவியில் | |
| பதவியில் அமர்வு 7 மார்ச்சு 2002 |
|
| முன்னவர் | ராதா பினோத் கோய்ஜம் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
|
|
|
| பிறப்பு | சூலை 19, 1948 தூபல் அதோக்பம், வடகிழக்கு இந்தியா |
| தொழில் | அரசியல்வாதி |
| சமயம் | இந்து |
ஓக்ரம் இபோபி சிங் (Okram Ibobi Singh, பிறப்பு சூலை 19, 1948) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் முதலமைச்சர். மார்ச்சு 7,2002 முதல் இப்பதவியில் உள்ளார். காங்கிரசுக் கட்சி உறுப்பினர்.[1].
பொருளடக்கம் |
இளமை[தொகு]
ஓக்ரம் அங்குபி மற்றும் லுகாமணி தேவிக்கு மகனாக 1948ஆம் ஆண்டு சூலை 19 அன்று தூபல் அதோக்பம் என்றவிடத்தில் பிறந்தார். இவரது மனைவியும் 2007ஆம் ஆண்டு தேர்தல்களில் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2].
கொலை முயற்சி[தொகு]
செப்டம்பர் 2, 2008 அன்று மாநில போராட்டக்காரர்கள் சிலர் இவரது வீட்டை எறிகணை வீச்சு கொண்டு தாக்கினர். வீட்டின் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த ஓக்ரம் சிங் மற்றும் அவரது மனைவி தப்பித்தனர். காவலர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.தாக்கியவர்கள் இதுவரை பிடிபடவில்லை.[3] தொலைபேசி மூலம் காங்கலெய்பக் மக்கள் புரட்சி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் இதற்கு உரிமை கோரினார்;மணிப்பூரில் புரட்சியத் தடுக்கும் விதமாக திட்டங்களை நிறைவேற்றாதிருக்க முதல்வருக்கு ஓர் எச்சரிக்கை இது எனக் கூறினார். [4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ IBOBI SINGH, Okram International Who's Who. accessed September 1, 2006.
- ↑ Ibobi is the second CM from Thoubal District MArch 8, 2005 Mainpur Online
- ↑ Rebels bomb the Manipur CM's house September 2, 2008, thatstamil (in Tamil)
- ↑ Manipur chief minister escapes assassination bid September 2, 2008, The Statesman
வெளியிணைப்புகள்[தொகு]
- Manipur NIC.
- Manipur Assembly NIC.