விண்வீழ்கல்
Appearance
(விண்கல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விண்வீழ்கல் அல்லது உற்கை (meteorite) என்பது ஒப்பீட்டளவில் சிறிய, பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற் கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் (எரி வெள்ளி) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதனையும் பாருங்கள்
[தொகு]- விண்கல் மழை
- வால்மழை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McSween, Harry (1999). Meteorites and their parent planets (2nd ed.). Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-58303-9. இணையக் கணினி நூலக மைய எண் 39210190.