மார்ச் 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| << | மார்ச் 2008 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||
| MMVIII | ||||||
மார்ச் 23 கிரிகோரியன் ஆண்டின் 82ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 83ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 283 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1752 - கனடாவின் முதலாவது பத்திரிகை த ஹலிஃபாக்ஸ் கசெட் வெளியிடப்பட்டது.
- 1801 - ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னன் வாள் ஒன்றினால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டான்.
- 1816 - அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.
- 1848 - நியூசிலாந்தின் டுனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்டிஷ் குடியேறிகள் தரையிரங்கினர்.
- 1857 - எலிஷா ஒட்டிஸ் முதலாவது உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.
- 1868 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- 1919 - இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.
- 1931 - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது சட்டபூர்வமாக்கப்பட்டது.
- 1940 - முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர்.
- 1956 - பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகியது.
- 1965 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.
- 1966 - தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது.
- 1982 - குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.
- 1994 - சைபீரியாவில் ரஷ்ய ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
- 1996 - தாய்வானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1998 - டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
- 2001 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.
[தொகு] பிறப்புக்கள்
- 1858 - லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1941)
- 1881 - ரொஜர் டூ கார்ட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1958)
- 1881 - ஹேர்மன் ஸ்டீடிஞ்சர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)
- 1907 - டானியல் போவெட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1992)
- 1910 - அகிரா குரோசாவா, ஜப்பானியத் திரைப்பட இயக்குனர் (இ. 1998)
[தொகு] இறப்புக்கள்
- 1931 - பகத்சிங், இந்திய சுதந்திரப் போராட்ட வீரன் (பி. 1907)
- 1964 - யோக சுவாமிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சித்தர் (பி. 1872)
- 1992 - பிரீடெரிக் ஹயெக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899)
[தொகு] சிறப்பு நாள்
- பாகிஸ்தான் - குடியரசு நாள் (1956)

