பியர் சிமோன் இலப்லாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பியர் சிமோன், மார்க்கி டி இலப்லாசு
Pierre-Simon, marquis de Laplace
Pierre-Simon Laplace.jpg
பியர் சிமோன் இலப்லாசு(1749-1827).
இறந்தபின் மேடம் ஃவெய்ட்டோ (Madame Feytaud) வரைந்த படம், 1842.
பிறப்பு 23 April 1749
பிறப்பிடம் Beaumont-en-Auge, Normandy, France
இறப்பு மார்ச்சு 5 1827 (அகவை 77)
இறப்பிடம் பாரிசு, பிரான்சு
வாழிடம் பிரான்சு
தேசியம் பிரான்சு
பல்கலைக்கழகம் கேன் பல்கலைக்கழகம் (University of Caen)
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்  
Simeon Denis Poisson
அறியப்படுவது Work in Celestial Mechanics
Laplace's equation
Laplacian
Laplace transform
Laplace distribution
Laplace-Beltrami operator
Laplace's demon
Laplace expansion
Young–Laplace equation
Discrete Laplace operator
Laplace–Runge–Lenz vector
Two-sided Laplace transform
Laplace's law
Laplace–Stieltjes transform
Laplace number
Laplace limit
De Moivre–Laplace theorem
Laplace invariant
Log-Laplace distribution
Laplace principle

பியர் சிமோன், இலாப்லாசு அல்லது மார்க்கி டி இலப்லாசு (ஏப்ரல் 23, 1749மார்ச் 5, 1827) என்பவர் 18-19 ஆவது நூற்றாண்டின் மிகச் சிறந்த கணிதவியல், வானவியலாளர்களுள் ஒருவர். வானியலை கணித அடிப்படையில் விரிவடையச் செய்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. புள்ளிக்குறிப்பியலிலும் இவருடைய பங்கு மிகச் சிறப்பானது. இவர் தமக்கு முன்னிருந்த அறிஞர்களின் கண்டுபிடிப்புகளை ஒழுங்கு படுத்தி, கணித அடித்தளம் இட்டு, தான் கண்டுபிடித்தவற்றையும் தொகுத்து ஐந்து பெரும் தொகுதிகளாக வான்பொருள்களின் இயக்கவியல் (Mécanique Céleste ) என்னும் பெரும் பல்லடுக்கு நூற்தொகுதியை 1799-1825 காலப்பகுதியில் வெளியிட்டார். இப் பல்லடுக்கு நூல்தொகுதியால், வடிவவியல் அடிப்படையாக இருந்த வானியல் இயக்கங்கள் பற்றிய அறிவை நுண்பகுப்பாய்வு (கால்க்குலசு) அடிப்படையான அறிவாக மாற்றினார். புள்ளிக்குறிப்பியலில் பேயீசிய நிகழ்தகவியல் (Bayesian probability) என்னும் துறைக்கு இவர் ஆற்றிய ஆய்வுகளே அடிப்படையாக அமைந்ததுள்ளது.[1].

பல இயற்பியல் பகுப்பாய்வுகளில் காணப்படும் இலப்லாசு சமன்பாடு (Laplace's equation) என்னும் இரண்டாம் படிய நுண்பகுப்புக் கணித சமன்பாடு இவர் உருவாக்கியதே.

[தொகு] மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. Stephen M. Stigler (1986) The history of statistics. Harvard University press. Chapter 3.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பியர்_சிமோன்_இலப்லாசு&oldid=1073306" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்