லீ குவான் யூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லீ குவான் யூ

லீ குவான் யூ (பிறப்பு செப் 16 , 1923), சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார்.இவரை சிங்கப்பூரின் தந்தை எனச் சொல்லுவர். இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார்.நவம்பர் 12 ஆம் நாள் 1954 ஆம் வருடம் மக்கள் செயல் கட்சியை நிறுவினார்.1959 முதல் 1990 வரை இவரது மக்கள் செயல் கட்சியை 7 முறை வெற்றிபெற வைத்தவர்.1990 - ல் மக்கள் செயல் கட்சியின் கோ சோக் தோங்கு பிரதமராக இருக்கும் போது இவர் அதில் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ ஹசீன் லூங், இவரின் மகன் ஆவார். லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். . பின்னர் 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் (Minister Mentor) பதவியில் பணியாற்றினார். சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன்னான 1955 ஆம் ஆண்டு தேர்தலில் ' தஞ்சாங் பாகர் ' தொகுதியில் வென்று எதிர்கட்சி தலைவராக இருந்தார். 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவரின் மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியினால் 'லி குவான் யூ' ஜூன் 3 ஆம் நாள் 1959 -ல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

குடும்பம்[தொகு]

லீ குவான் யூ, அவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான்காவது தலைமுறைச் சீனத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் மூதோதயார் லீ போக் பூன், 1846ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்தொங் மாகாணத்தில் இருந்து வெளியேறி சிங்கப்பூரின் Strait settlementsக்கு வந்ததாக கூறி உள்ளார்.இவர் வழக்கறிஞர் படிப்பை முடித்தவர்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=லீ_குவான்_யூ&oldid=1796478" இருந்து மீள்விக்கப்பட்டது