மார்ச் 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மார்ச்சு 5 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மார்ச் 5 கிரிகோரியன் ஆண்டின் 64ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 65ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 301 நாட்கள் உள்ளன.
| << | மார்ச் 2012 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXII | ||||||
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1770 - பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1793 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.
- 1824 - பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.
- 1940 - சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
- 1964 - இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.
- 2008 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1871 - ரோசா லக்சம்பேர்க், மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1919)
- 1886 - டொங் பிவு (Dong Biwu), சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர் (இ. 1975)
- 1913 - கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (இ. 2009)
- 1934 - Daniel Kahneman, நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
- 1973 - த. ஜெயசீலன், ஈழத்து எழுத்தாளர்
[தொகு] இறப்புக்கள்
- 1878 - ரி. சின்னத்தம்பி, உடுப்பிட்டியைச் சேர்ந்த ஈழத்துப் புலவர்
- 1953 - ஜோசப் ஸ்டாலின், சோவியத் தலைவர் (பி. 1878)
- 1966 - அன்னா அக்மதோவா, ரசியக் கவிஞர் (பி. 1889)
- 2006 - கே. ஷங்கர், தமிழ்த் திரைப்பட இயக்குநர்