1801
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1770கள் 1780கள் 1790கள் - 1800கள் - 1810கள் 1820கள் 1830கள் |
| ஆண்டுகள்: | 1798 1799 1800 - 1801 - 1802 1803 1804 |
| 1801 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1801 MDCCCI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1832 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2554 |
| சீன நாட்காட்டி | 4497-4498 |
| எபிரேய நாட்காட்டி | 5560-5561 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1856-1857 1723-1724 4902-4903 |
| இரானிய நாட்காட்டி | 1179-1180 |
| இசுலாமிய நாட்காட்டி | 1215 – 1216 |
| ரூனிக் நாட்காட்டி | 2051
|
| விக்கி ஊடக நடுவத்தில் 1801 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
1801 (MDCCCI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 1 - பெரிய பிரித்தானியாவும் அயர்லாந்தும் இணைந்த அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டு இரண்டும் ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.
- ஜனவரி 1 - ஜூசெப் பியாசி என்பவர் செரெஸ் என்ற dwarf கோளைக் கண்டுபிடித்தார்.
- பெப்ரவரி 9 - பிரான்ஸ், ஆஸ்திரியாக்கிடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
- பெப்ரவரி 27 - வாஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
- மார்ச் 23 - ரஷ்ய மன்னன் முதலாம் போல் கொல்லப்பட்டான். இவனது மகன் முதலாம் அலெக்சாண்டர் மன்னனானான்.
- ஜூன் 27 - கெய்ரோ நகரம் பிரித்தானியப் படையினரிடம் வீழ்ந்தது.
- செப்டம்பர் 3 - இலங்கையில் நெல், மற்றும் சிறு தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- அக்டோபர் 24 -மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
- பெரிய பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. லண்டனில் 860,035 பேர் பதிவாயினர்.
- பிரான்சில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
தொடர் நிகழ்வுகள் [தொகு]
- பிரெஞ்சு புரட்சிப் போர் (French Revolutionary Wars 1792-1802)
பிறப்புகள் [தொகு]
- சனவரி 13 - வில்லியம் டெனிசன் (William Denison), இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1856)
- திசம்பர் 10 - ரிச்சர்ட் பெர்ன்ஸ் (Richard Berens), இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1859)
இறப்புகள் [தொகு]
- அக்டோபர் 24 - மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள்.
- நவம்பர் 16 - ஊமைத்துரை, வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி.