ஏப்ரல் 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஏப்ரல் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||
| MMXIII | ||||||
ஏப்ரல் 18 கிரிகோரியன் ஆண்டின் 108ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 109ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 257 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1025 - போலெஸ்லாவ் குரோப்றி போலந்தின் முதல் மன்னனாக முடி சூடினான்.
- 1797 - நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர்.
- 1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
- 1880 - மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் கொல்லப்பட்டனர்.
- 1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1909 - ஜோன் ஆஃப் ஆர்க் பத்தாம் பயஸ் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டாள்.
- 1912 - கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.
- 1930 - பிபிசி வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் "எந்த செய்திகளும் இல்லை" என அறிவித்தது.
- 1941 - ஜெர்மனியப் படைகள் ஏதன்சை நெருங்கும் போது கிறீஸ் பிரதமர் அலெக்சாண்ட்ரொஸ் கொரிசிஸ் தற்கொலை செய்து கொண்டார்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹெலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
- 1949 - அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
- 1954 - கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1958 - இலங்கையில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.
- 1980 - சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் அதிபரானார்.
- 1983 - லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
- 1993 - பாகிஸ்தான் அதிபர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
- 1996 - லெபனானில் ஐநா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்[தொகு]
- 1858 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)
- 1905 - ஜார்ஜ் எச். ஹிட்சிங்க்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1998)
- 1940 - ஜோசப் கோல்ட்ஸ்டெயின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
இறப்புகள்[தொகு]
- 1976 - ஹென்ட்றிக் டாம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
- 1955 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1879)
- 2007 - லெட்டினண்ட் கேணல் கலையழகன் தமிழீழத்தின் அனைத்துலகத் தொடர்பகத் துணைப் பொறுப்பாளர். (பி. 1976)
சிறப்பு நாள்[தொகு]
- ஈரான் - இராணுவ நாள்
- சிம்பாப்வே - விடுதலை நாள் (1980
- உலக மரபுடைமை நாள் (உலக பாரம்பரிய நாள்)