ராபர்ட் முகாபே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ராபர்ட் முகாபே | |
ஜனவரி 2008இல் முகாபே |
|
|
சிம்பாப்வேயின் குடியரசுத் தலைவர்
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு டிசம்பர் 1987 |
|
| உதவி தலைவர் | சைமன் முசென்டா ஜாசுவா இன்கோமோ ஜோசப் இம்சிகா ஜாய்ஸ் முஜூரூ |
| முன்னிருந்தவர் | கனான் பனானா |
|
சிம்பாப்வேயின் பிரதமர்
|
|
| பதவியில் ஏப்ரல் 18 1980 – டிசம்பர் 31 1987 |
|
| அதிபர் | கனான் பனானா |
| முன்னிருந்தவர் | ஏபெல் முசொரேவா (ரொடீசியாவின் பிரதமர்) |
| பின்வந்தவர் | பதவி நீக்கப்பட்டது |
|
அணிசேரா நாடுகளின் பொதுச் செயலாளர்
|
|
| பதவியில் செப்டம்பர் 6 1986 – செப்டம்பர் 7 1989 |
|
| முன்னிருந்தவர் | சேல் சிங் |
| பின்வந்தவர் | ஜானெஸ் துர்னோவ்செக் |
| அரசியல் கட்சி | சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம்-தேசாபிமான முன்னணி (ZANU-PF) |
|
|
|
| பிறப்பு | பெப்ரவரி 21 1924 (வயது 85) குடாமா, ஹராரே, தெற்கு ரொடீசியா |
| வாழ்க்கைத்துணை | சாலி ஹேஃப்ரோன் (இழந்து) கிரேஸ் மருஃபு |
| பழைய மாணவர் | ஃபோர்ட் ஹேர் பல்கலைக்கழகம் இலண்டன் பல்கலைக்கழகம் தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழகம் |
| சமயம் | கத்தோலிக்கம் |
| கையொப்பம் | |
ராபர்ட் கேப்ரியல் முகாபே (Robert Gabriel Mugabe, பிறப்பு: பெப்ரவரி 21, 1924) 1980 முதல் இன்று வரை சிம்பாப்வே நாட்டின் தலைவராக உள்ளார். 1980 முதல் 1987 வரை பிரதமராக பதவி வகித்தார். 1987 முதல் இன்று வரை குடியரசுத் தலைவராக பதவியிலுள்ளார். 1960களில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட வீரராக இருந்த முகாபே சிம்பாப்வே விடுதலை பெற்று ஆப்பிரிக்க மக்கள் இவரை நாயகராகப் போற்றினர்.
1998 முதல் பல்வேறு நாடுகள் இவரைக் குற்றம் சாட்டியுள்ளனர். இவரின் பொருளாதாரக் கொள்கைகளும், இரண்டாம் கொங்கோ போரில் செலவான குறுக்கிடலும் சிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாயின[ஆதாரம் தேவை]. 2008இல் இவரின் அரசியல் கட்சி, சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம், முதல் தடவை தேர்தலில் மக்களாட்சி மாற்றல் இயக்கம் என்ற எதிர்க் கட்சியிடம் தோற்றது.