சூலை 9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சூலை 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
| MMXIII | ||||||
சூலை 9 கிரிகோரியன் ஆண்டின் 190வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 191வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 175 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 455 - அவிட்டஸ் மேற்கு ரோமப் பேரரசின் மன்னனானான்.
- 1357 - புனித ரோமப் பேரரசர் நான்காம் சார்ல்ஸ் பிராகா நகரத்தில் சார்லஸ் பாலத்திற்கு அடித்தளம் நாட்டினார்.
- 1755 - பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் குடியேற்ற துணை இராணுவக் குழு பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
- 1790 - பால்ட்டிக் கடலில் இடம்பெற்ற மோதலில் சுவீடனின் கடற்படயினர் ரஷ்யக் கப்பல்களை பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றினர்.
- 1810 - ஒல்லாந்து நாட்டை நெப்போலியன் தனது பிரெஞ்சு இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான்.
- 1816 - ஆர்ஜென்டீனா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஹட்சன் துறைமுகம் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது.
- 1868 - அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
- 1900 - ஆஸ்திரேலிய கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப் பொதுநலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார்.
- 1903 - யாழ்ப்பாணத்தில் இந்து வாலிபர் அமைப்பு (YMHA) உருவாக்கப்பட்டது.
- 1918 - டென்னசியில் நாஷ்வில் என்ற இடத்தில் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 101 பேர் கொல்லப்பட்டு 171 பேர் படுகாயமடைந்தனர்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1948 - பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.
- 1982 - ஐக்கிய அமெரிக்க போயிங் விமான லூசியானாவின் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 146 பேரும் தரையில் இருந்த 8 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1991 - 30 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
- 1995 - யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
- 1995 - யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 2002 - ஆபிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாபிரிக்க அதிபர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.
- 2006 - சைபீரியாவில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - 2006 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
- 2006 - அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.
பிறப்புகள் [தொகு]
- 1929 - ஏ. எம். ராஜா, பின்னணிப் பாடகர் (இ. 1989)
- 1930 - கே. பாலச்சந்தர், தமிழ் திரைப்பட இயக்குநர்
- 1956 - டொம் ஹாங்க்ஸ், அமெரிக்க ஹாலிவுட் நடிகர்
இறப்புகள் [தொகு]
- 2009 - சி. ஆர். கண்ணன், தமிழக எழுத்தாளர்
சிறப்பு நாள் [தொகு]
- ஆர்ஜென்டீனா - விடுதலை நாள் (1816)