தைமூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தைமூர்
தைமூரியப் பேரரசின் எமிர்
Amir TemurZoomed.jpg
உஸ்பெகிஸ்தானின் ஷஹ்ரிசாப்ஸ் என்னும் இடத்தில் உள்ள தைமூரின் சிலை
ஆட்சிக்காலம் 1370-1405
முடிசூட்டு விழா 1370, பால்க்
முழுப்பெயர் தாமெட் சிங்கிசிட் கான்
பிறப்பு ஏப்ரல் 6, 1336
பிறப்பிடம் ஷாஹ்ரிசாப்ஸ், திரான்சாக்சியானா
இறப்பு பெப்ரவரி 19, 1405 (வயது 69)
இறந்த இடம் ஒட்ரார், சிர் தார்யா
புதைக்கப்பட்டது குர்-எ அமிர், சமர்க்கண்ட்
முன்னிருந்தவர் அமிர் ஹுசைன்
பின்வந்தவர் காலில் சுல்தான்
அரச குடும்பம் தைமூரியர்
தந்தை முக்ஹம்மத் தரகாய்
தாய் தெக்கீனா மொஹ்பேகிம்

தைமூர் (6 ஏப்ரல் 1336-19 பெப்ரவரி 1405) 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய-மங்கோலியரான பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே. இப்பேரரசு, இந்தியாவில் முகலாயப் பேரரசாக 1857 ஆம் ஆண்டுவரை நீடித்தது.

மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்களின் வழி வந்த தைமூரின் இனத்தவர் துருக்கிய அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். பாரசீகக் கல்வியும், உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர் தனது மூதாதையர்களின் பேரரசை மீள்விக்க எண்ணம் கொண்டார். இவரது காலத்தில் துருக்கிய இலக்கியத்தில் முக்கியமானவை சில எழுதப்பட்டன. துருக்கியப் பண்பாட்டின் செல்வாக்கும் விரிவடைந்து செழித்தது.

தைமூர் ஒரு போரியல் மேதை. போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஓய்வு நேரங்களில் சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை.

வரலாற்றில், அவரது வாழ்நாளிலும் கூட, தைமூர் ஒரு முரண்பட்டவராகவும், சர்ச்சைக்கு உரியவராகவும் இருந்தார். பல கலைகளை ஆதரித்த இவர், பல சிறந்த கல்வி மையங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தைமூர்&oldid=1352141" இருந்து மீள்விக்கப்பட்டது