பாபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாபர்
A portrait of Babur, from an early illustrated manuscript of the Baburnama
Flag of the Mughal Empire.svg முதலாம் முகலாயப் பேரரசர்
ஆட்சிக்காலம் 30 ஏப்ரல் 1526 – 26 டிசம்பர் 1530
முன்னையவர் தைமூர்
பின்னையவர் நசிருதீன் உமாயூன்
வாழ்க்கைத் துணை * ஆயிஷா சுல்தான் பேகம்
வாரிசு
* நசிருதீன் உமாயூன், மகன்
முழுப்பெயர்
சாகிருதீன் முகம்மத் பாபர்
மரபு தைமூர்
தந்தை ஓமர் ஷேக் மீர்சா
வம்சம் முகலாயப் பேரரசு
தாய் குத்லுக் நிகர் கானும்
அடக்கம் காபூல், ஆப்கானித்தான்
சமயம் சுன்னி இஸ்லாம்

பாபர் (Babur) எனப்படும் சாகிருதீன் பாபர், அல்லது சாகிருதீன் முகம்மத் பாபர் (பெப்ரவரி 14, 1483டிசம்பர் 26, 1530) மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பேரரசர். இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவர் இவரே. இவர் 14ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்த தைமூரியப் பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் (Tīmūr bin Taraghay Barlas) என்பவருடைய நேரடியான பரம்பரையில் வந்தவராவார். 13ஆம் நூற்றாண்டில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடர்ச்சியான பேரரசான மங்கோலியப் பேரரசை உருவாக்கிய கெங்கிஸ் கான் (Genghis Khan), பாபரின் தாய்வழி முன்னோராகக் கருதப்படுகின்றார். பல பின்னடைவுகளை எதிர்கொண்ட போதும், இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற முகலாயப் பேரரசை உருவாக்குவதில் இவர் வெற்றி பெற்றார்.

பின்னணி [தொகு]

தற்கால உஸ்பெகிஸ்தானில் உள்ள, பெர்கானாப் பள்ளத்தாக்கில் (Fergana Valley) உள்ள அண்டிஜான் (Andijan) என்னும் நகரத்தில் 1483 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாபர் பிறந்தார். பெர்கானாப் பள்ளத்தாக்கை ஆண்டுவந்த ஓமர் ஷேக் மீர்சா என்பவருக்கும், அவரது மனைவியான குத்லுக் நிகர் கானும் என்பவருக்கும் பாபர் மூத்த மகனாவார். இவர் மங்கோலிய மூலத்தைக் கொண்ட பார்லாஸ் என்னும் இனக்குழுவைச் சேந்தவர். எனினும், இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், துருக்கிய மற்றும் பாரசீகப் பண்பாட்டைத் தழுவிக்கொண்டு, இசுலாம் மார்க்கத்தைச் சார்ந்து, துருக்கிஸ்தான் என்னும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். பாபரின் தாய் மொழி சகாட்டை (Chaghatai) என்பதாகும், ஆனாலும் அவர் பாரசீக மொழியையும் சரளமாகப் பயன்படுத்த வல்லவராக இருந்தார்.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

வெளியிணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாபர்&oldid=1344159" இருந்து மீள்விக்கப்பட்டது