காசுப்பியன் கடல்
| காசுப்பியன் கடல் | |
|---|---|
|
|
|
| புவியமைவுக் கூறுகள் | |
| வகை | Endorheic உப்புநீர் நிலையானது இயற்கை |
| உள்வடிகால் | வோல்கா ஆறு |
| வெளிப்போக்கு | ஆவியாதல் |
| வடிநிலம் | 3,626,000 கிமீ2 (1,400,000 சதுர மைல்)[1] |
| வடிநில நாடுகள் | அசர்பெய்சான் ஈரான் கசக்தான் உருசிய கூட்டாட்சி துருக்குமெனித்தான் |
| மேற்பரப்பளவு | 371,000 km² (143,200 சதுரமைல்) |
| சராசரி ஆழம் | 184 m (604 அடி) |
| நீர் கனவளவு | 78,200 km³ (18,750 கன மைல்) |
| இருப்புக் காலம் | 250 ஆண்டுகள் |
| மேற்பரப்பின் உயரம் | -28 m (-92 ft) |
ஆங்கிலத்தில் காசுப்பியன் சீ (Caspian Sea) என்று அழைக்கப்படுகிறது. காசுப்பியன் என்ற சொல் கசப்பு (bitter) என்ற தமிழ் சொல்லின் திரிபு என்றும் கூறப்படுகிறது.
காசுப்பியன் கடல் உப்புநீர் கொண்டதால் கடலென்று சொல்லப்பட்டாலும் இது ஓர் ஏரியாகும். உலகிலேயே மிகப் பெரிய ஏரி இதுவே. 317,000 சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. இவ் ஏரியில் அதிக ஆழம் கொண்ட இடத்தில் 1025 மீட்டர் ((3,363 அடி) ஆழம் உள்ளது. இதில் உள்ள நீரானது சுமார் 1.2% உவர்ப்புத் தன்மை (உப்புத்தன்மை) கொண்டுள்ளது. இது ஆழ்கடல்களின் உவர்ப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசக்ஸ்தான் ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்டது.
இவ்வேரி முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்டதாக இது 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மாறியது.
இவ்வேரியில் வாழும் ஸ்ரர்ஜியோன் எனும் மீனின் சினையே கவியார் என்ற பிரபல உணவு வகையாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதிகளவு பிடிக்கப்பட்டதால் இவ்வகை மீனினம் அரிதாகி வருகிறது. அதிகளவு மீன்பிடிப்பைத் தடுத்து அம் மீனினத்தை பழைய எண்ணிக்கைக்குக் கொண்டு வர அறிவியலாளர் முயல்கின்றனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ van der Leeden, Troise, and Todd, eds., The Water Encyclopedia. Second Edition. Chelsea, MI: Lewis Publishers, 1990. page 196.