இப்னு கல்தூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இப்னு கல்தூன்
முசுலிம் அறிஞர்
மத்திய காலம்
Ibn Khaldoun-Kassus.jpg
தூனிசில் உள்ள இப்னு கல்தூனின் சிலை
முழுப் பெயர் இப்னு கல்தூன்
சிந்தனை
மரபு(கள்)
மாலிக்கி மத்ஹப்,
இசுலாமியப் பொருளாதாரச் சட்டவியல்
முக்கிய
ஆர்வங்கள்
சமூக அறிவியல்கள், சமூகவியல், வரலாறு, வரலாற்றுவரைவியல், பண்பாட்டு வரலாறு, வரலாற்று மெய்யியல், மக்கட் பரம்பலியல், இராசதந்திரம், பொருளியல், இசுலாம், படைத்துறைக் கோட்பாடு, மெய்யியல், அரசியல், இறையியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
மக்கட் பரம்பலியல், வரலாற்று வரைவியல், பண்பாட்டு வரலாறு, வரலாற்று மெய்யியல், சமூகவியல், சமூக அறிவியல், தற்காலப் பொருளியல் போன்ற துறைகளின் முன்னோடி.

இப்னு கல்தூன் என அழைக்கப்பட்ட அபு சைத் அப்துர் ரகுமான் இப்னு முகம்மது இப்னு கல்தூன் அல்-ஹள்ரமீ (அரபு மொழி: أبو زيد عبد الرحمن بن محمد بن خلدون الحضرمي , , (மே 27, கிபி 1332 /732 AH – மார்ச் 19, கிபி 1406 /808 AH)), ஒரு வட ஆப்பிரிக்கப் பல்துறையாளர் ஆவார். வட ஆபிரிக்காவிலுள்ள இன்றைய தூனிசியப் பகுதியில் பிறந்த இவர் வானியல், பொருளியல், வரலாறு, இசுலாம், இசுலாமிய இறையியல், நீதித்துறை, சட்டம், கணிதம், படைத்துறை உத்திகள், மெய்யியல், சமூக அறிவியல், அரசியல் ஆகிய துறைகளில் வல்லவராக இருந்தார். இவர் ஒரு அராபிய அல்லது பர்பர் இனத்தைச் சேர்ந்தவர். இவர், மக்கட் பரம்பலியல், பண்பாட்டு வரலாறு, வரலாற்றுவரைவியல், வரலாற்று மெய்யியல், சமூகவியல் போன்ற பல சமூக அறிவியல் துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். இந்திய அறிஞரும், மெய்யியலாளருமான சாணக்கியருடன் இவரும் தற்காலப் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகின்றனர். பலர் இவரே இத்தகைய பல சமூக அறிவியல் துறைகளினதும், பொதுவாகச் சமூக அறிவியலினதும் தந்தை எனக் கருதுகிறார்கள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இப்னு_கல்தூன்&oldid=1353901" இருந்து மீள்விக்கப்பட்டது