சாபர்னாமா (எசுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாபர்னாமா என்பது சரீபலுதீன் அலி எசுதி என்பவர் எழுதிய ஒரு புகழ்பாடும் புத்தகமாகும். சாபர்னாமா என்பதன் பொருள் "வெற்றிகளின் புத்தகம்" என்பதாகும். இந்தப் புத்தகம் அதன் முக்கியப் பாடமான துருக்கிய-மங்கோலியப் பாரசீகப் படையெடுப்பாளரான தைமூரைப் பற்றி அவர் இறந்து இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு எழுதப்பட்டது. இப்பணியை எசுதிக்கு தைமூரின் பேரனான இப்ராகிம் சுல்தான் 1424-28 ஆண்டுகளில் கொடுத்தார். இப்புத்தகம் தைமூரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கான மிக முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இன்றளவும் விளங்குகிறது.[1] தைமூரின் அரசவை எழுத்தாளர்கள் மற்றும் செயலாளர்கள் எடுத்த குறிப்புகளைப் பயன்படுத்தி இப்புத்தகத்தின் உரை எழுதப்பட்டது. இந்த புத்தகத்தின் வரலாறானது கவனம் மற்றும் விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்பதை இச்செயல் நமக்கு உணர்த்துகிறது.

தைமூர் பகுதாதுவை வெல்லுதல். இப்ராகிம் சுல்தானின் நகலிலிருந்து. ஆண்டு 1435-1436.

இசுலாமிய ஈரானின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகள் மற்றும் புத்தகங்கள் புகழ்பாடும் வகையாக இருந்தன. தங்களது சொந்த மரபை நிறுவும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் தேவைக்காக இவை எழுதப்பட்டன. தன்னுடைய செயல்கள் தெளிவான மற்றும் எளிமையான மொழியில் நினைவுகூரப்பட வேண்டும் என தைமூர் விரும்பினார்.[2] இந்தப் புத்தகம் பாரசீகத்தில் அடிக்கடி நகல் எடுக்கப்பட்டும் விளக்கப்பட்டுக் கொண்டும் இருந்தது. இது உசுபெக்குகளின் கீழ் சகதை துருக்கிய மொழிக்கும், உதுமானியத் துருக்கிய மொழிக்கு 16ஆம் நூற்றாண்டின் போதும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இது 1722 ஆம் ஆண்டு பிராங்கோயிசு பெட்டிசு தீலா குரோயிக்சால் பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. Woods, John E. (April 1987). "The Rise of Tīmūrid Historiography". Journal of Near Eastern Studies 46 (2): 86, 99–101. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_1987-04_46_2/page/86. 
  2. Sims, Eleanor (1973). The Garrett Manuscript of the Zafar-Name: A Study in Fifteenth-Century Timurid Patronage. New York University. p. 147.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபர்னாமா_(எசுதி)&oldid=3759350" இலிருந்து மீள்விக்கப்பட்டது