செங்கிஸ் கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செங்கிஸ் கான் Genghis Khan |
|
| மங்கோலியப் பேரரசன் | |
|---|---|
| ஆட்சிக்காலம் | 1206–1227 |
| முடிசூட்டு விழா | 1206 (மங்கோலியாவின் அனாண் ஆற்றில் குறுல்த்தாய் என்னும் இடத்தில் |
| முழுப்பெயர் |
(இயற்பெயர்:தமுஜின்) மங்கோலிய மொழியில் வலது. |
| பட்டங்கள் | கான், ககான் |
| பிறப்பு | அண். 1162 |
| பிறப்பிடம் | கெண்டீ மலைகள், மங்கோலியா |
| இறப்பு | 1227 (அகவை 65) |
| பின்வந்தவர் | ஒகோடி கான் |
| துணைவர் | போர்ட்டி உஜின் குலன் யிசுஜென் யிசுய் மற்றும் பலர் |
| வாரிசுகள் | ஜோசி ஜகாடேய் ஒகோடி டோளுய் பலர் |
| அரச குடும்பம் | போரிஜின் |
| தந்தை | எசுக்கெய் |
| தாய் | ஓவெலுன் |
செங்கிஸ் கான் (1162 அல்லது 1155 – ஆகஸ்டு 18, 1227) மங்கோலியப் பேரரசைத் தாபித்த மங்கோலிய அரசராவார். 1206 இல் மங்கோலிய துர்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் அமைத்தார். இவரது இயற்பெயர் தெமுசின் போர்சிகின் என்பதாகும். உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். தனது 72 ஆவது வயதில் இறந்தார். இவரது இறப்புக்கான காரணம் சரியாக அறியப்படவில்லை.