ஒகோடி கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஒகோடி கான் | |
|---|---|
| கான் of the Mongol Empire (Supreme கான் மங்கோலியா அரசன் ) image= ![]() |
|
| ஆட்சிக்காலம் | 1229 – 1241 |
| முடிசூட்டு விழா | 1229 |
| பிறப்பு | c. 1186 |
| இறப்பு | 1241 (வயது 55) |
| இறந்த இடம் | மங்கோலியா |
| முன்னிருந்தவர் | டோளுய் (Regent) |
| பின்வந்தவர் | குயுக் கான் |
| துணைவர் | டோரேஜெனே |
| அரச குடும்பம் | போரிஜின் |
| தந்தை | தெமுஜின் (செங்கிஸ் கான் ) |
| தாய் | போர்டே உஜின் |
ஒகோடி கான், (Mongolian: Өгэдэй, ஒகோடி; also ஒகொடை or ஆக்டை; ஒகோடி, c. 1186 – 1241),ஒகோடி செங்கிஸ் கானின் மூன்றாவது பிள்ளை ஆவார். இரண்டாம் மிகச்சிறந்த கான் என்றும் அழைக்கப்படுவார். தன்னுடைய தந்தை தொடங்கி வைத்த மங்கோலிய பேரரசை சரியான முறையில் வழிநடத்தி மங்கோலிய சாம்ராஜியத்தை ஐரோப்பா, ஆசியா கண்டத்தில் சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசியாவில் வேரூன்றியவர் ஒகோடி கான் ஆவார்.[1]
ஆரம்பக்காலம் [தொகு]
ஒகோடிக்கு 17 வயது இருக்கும்பொழுது செங்கிஸ் கான் தலைமையில் சென்ற போரில், இவருக்கு காயம் ஏற்பட்டு மயங்கி கிடக்க இவரை இவரது சித்தப்பா காப்பாற்றி அழைத்து வந்தார். இந்த போரில் எதிரி படையில் இருந்த வில் வித்தையில் சிறந்த வீரன் மரணம் அடைந்த பின்பு,அவனுடைய மனைவியை ஒகோடிக்கு செங்கிஸ் கான் மறுமணம் செய்து வைத்தார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ John Joseph Saunders-The History of the Mongol Conquests, p.74
