பட்டு
பட்டு (Silk) என்பது ஒரு நூல், இது பட்டு ஆடைகளை தயாரிக்க பயன்படுகின்றது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
சீனாவில் பண்டைய காலத்தில் ஒரு பேரரசின் இராணி (Si Ling-Chi) ஒருவர், அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த முசுக்கொட்டைச் செடியில் இருந்து ஒரு புழு, நல்ல இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கூடு ஒன்றைக் கட்டியதைப் பார்த்து இருக்கிறார். அதனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அரசி, கூட்டின் இழையப் பற்றி இழுக்க, அது நெடிய தூரம் நீண்டதாம். அதிலிருந்து, ஒரு கூடு ஒன்று ஒரே இழையில் ஆனதையும் தெரிந்து கொண்டு, நிறைய கூடுகளைச் சேர்த்து, பின் அதன் இழைகளைக் கொண்டு ஒரு சிறு ஆடை தயாரித்துப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, இப்படியாகத் துவங்கியதுதான் பட்டு நூலாடைகள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டதாம்.
இப்படியாக சுமார் 2500 ஆண்டுகள் கழிந்துவிட, ரோமானிய மன்னன் எதேச்சையாக சீன இளவரசியைத் திருமணம் செய்ய, முதல் முறையாக பட்டுக் கூடும், புழுவும் எல்லை தாண்டியது. எனினும் அவர்கள் அதனை வளர்க்கத் தெரிந்து இருக்கவில்லை. மீண்டும் பாதிரியார் ஒருவரைச் சீனாவுக்கு அனுப்பி, அவர் மூலமாகத் தெரிந்து கொள்ள முறபட்டும், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இப்படியாக, சீனாவின் பட்டு நூலாட்சி கொடி கட்டிப் பறந்தது.
இந்தச் சூழலில், சப்பானியர்கள் வெகு சாமர்த்தியமாக பட்டு நூல் வளர்க்கத் தெரிந்த நான்கு சீனப் பெண்மணிகளைக் கடத்திச் சென்று அல்லது பணிப் பெண் வேலைக்கென அழைத்துச் சென்று, பின் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின் ஜப்பானியர்கள் அவர்கள் மூலமாக பட்டு நூல் வளர்ப்பைத் துவக்கி, அதன் உற்பத்தியில் மேம்பாடு கண்டு சீனாவின் உற்பத்தியை விடப் பன்மடங்கு உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். ஆனால், சீனர்களுக்கு அபிவிருத்தி செய்யத் தெரிந்து இருக்கவில்லையாம்.
அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும் சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது.
பட்டு உற்பத்தி [தொகு]
பட்டுப்புழு வளர்ப்பை "பட்டுப்புழு வேளாண்மை" என்று கூறுவர். முப்பதுக்கும் மேற்ப்பட்ட நாடுகள் பட்டுப்புழு வளர்ப்பை செய்கின்றனர். இதில் அதிக உற்பத்தி செய்யும் நாடுகள் இந்தியாவும் (14%) , சீனாவும்மாகும் (54%).
| பட்டு வளர்ப்பில் முதல் 10 நாடுகள் — 2005 | ||||
|---|---|---|---|---|
| நாடு | உற்பத்தி (Int $1000) | குறிப்பு | உற்பத்தி (MT) | குறிப்பு |
| 978,013 | C | 290,003 | F | |
| 259,679 | C | 77,000 | F | |
| 57,332 | C | 17,000 | F | |
| 37,097 | C | 11,000 | F | |
| 20,235 | C | 6,000 | F | |
| 16,862 | C | 5,000 | F | |
| 10,117 | C | 3,000 | F | |
| 5,059 | C | 1,500 | F | |
| 3,372 | C | 1,000 | F | |
| 2,023 | C | 600 | F | |
| No symbol = official figure,F = FAO estimate, * = Unofficial figure, C = Calculated figure; Production in Int $1000 have been calculated based on 1999-2001 international prices |
||||
வளர்ப்பு முறை [தொகு]
பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் முழுவதிலும் மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் 5-10 முறை அறுவடை செய்யலாம். இதன் இடைவுளி 70-80 நாட்கள் ஆகும்.