காஷ்மீர்
காஷ்மீர் (கஷ்மீரி: कॅशीर, کٔشِیر ; ஹிந்தி: कश्मीर ; உருது: کشمیر) இந்திய துணை கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. ஆதியில், இமயத்திற்கும் பிர் மலைத் தொடருக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கே காஷ்மீர் எனப்பட்டது.
இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மூன்று பகுதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் ஆகிய இரண்டு பகுதிகளையும் கொண்டுள்ளது. அக்சாய் சின் என்றழைக்கப்படும் பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைப் பாங்கான இடங்களுக்கு கீழ் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல ஆறுகளும் அருவிகளும் பாய்வதால், இப்பகுதியின் இயற்கை வளம் அழகுடன் காட்சி அளிக்கிறது.
பல காலங்களாக, இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாகவே காஷ்மீர் கருதப்படுகிறது. பிற்காலத்தில் புத்த மதம் முக்கியத்துவம் பெற்று, இன்றும் சைவம் மற்றும் இஸ்லாமியத்திற்கும் இடையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.