மொழிபெயர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு (translation) என்பது மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை, பொருள் மாறாமல், மற்றொரு மொழிச் சொற்களை கொண்டு அறியத் தருதல் ஆகும்.[1] மாறாக தெளிவாக்கல் என்பது எழுத்துக்கு முந்தையதாக, பேச்சை வேறுமொழியில் தருவதாகும். மொழியாக்கம் எழுதப்பட்ட இலக்கியத்தை அடுத்தே உருவானது; there exist partial translations of the சுமேரியர்களின் கில்கமெஷ் காப்பியத்தை (கி.மு. 2000 வில்) தென்மேற்கு ஆசிய மொழிகளில் பகுதியாக மொழிபெயர்க்கப்பட்டது.[2]

மொழிபெயர்ப்பாளர்கள் மூலமொழியில் உள்ள மரபுத்தொடர்களையும் பயன்பாட்டு பாணிகளையும் மாற்றுமொழி ஆக்கத்தில் புழங்கும் தீவாய்ப்பு உள்ளது. அதேநேரம் இத்தகைய இறக்குமதிகளால் இலக்குமொழி வளப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகளும் உள்ளன. மொழிபெயர்ப்பாளர்களால் பல மொழிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.[3]

தொழிற்புரட்சிக்குப் பிறகு, வணிக ஆவணங்களின் தேவைக்காக 18வது நூற்றாண்டின் நடுவிலிருந்து சில மொழிபெயர்ப்பு கூறுகள் முறையான வடிவில் இதற்கென தனிப்பட்ட பள்ளிகளிலும் தொழில்முறை சங்கங்களிலும் கற்பிக்கப்பட்டன.[4]

மொழிபெயர்ப்பிற்கு சலிக்காத உழைப்பு தேவையிருப்பதால் 1940களில் பொறியியலாளர்கள் தானியக்கமாக மொழிபெயர்க்க (இயந்திர மொழிபெயர்ப்பு) அல்லது மனித மொழிபெயர்ப்பாளருக்கு துணையாக இருக்க கருவிகளை உருவாக்கி வருகிறார்கள்.[5] இணையத்தின் வளர்ச்சி உலகளவில் மொழிபெயர்ப்பு சேவைகளுக்கான சந்தையை விரிவுபடுத்தி உள்ளது. மேலும் இடைமுக மொழியின் உள்ளூராக்கலுக்கும் வழிவகுத்துள்ளது.[6]

மொழிபெயர்ப்பின் கோட்பாடு, விவரிப்பு, செயற்பாடு ஆகியவற்றைக் குறித்த முறையான கல்வியை மொழிபெயர்ப்பியல் வழங்குகிறது.[7]

மேற்சான்றுகள்[தொகு]

  1. The Oxford Companion to the English Language, Namit Bhatia, ed., 1992, pp. 1,051–54.
  2. J.M. Cohen, "Translation", Encyclopedia Americana, 1986, vol. 27, p. 12.
  3. Christopher Kasparek, "The Translator's Endless Toil", The Polish Review, vol. XXVIII, no. 2, 1983, pp. 84-87.
  4. Andrew Wilson, Translators on Translating: Inside the Invisible Art, Vancouver, CCSP Press, 2009.
  5. W.J. Hutchins, Early Years in Machine Translation: Memoirs and Biographies of Pioneers, Amsterdam, John Benjamins, 2000.
  6. M. Snell-Hornby, The Turns of Translation Studies: New Paradigms or Shifting Viewpoints?, Philadelphia, John Benjamins, 2006, p. 133.
  7. Susan Bassnett, Translation studies, pp. 13-37.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மொழிபெயர்ப்பு&oldid=1728181" இருந்து மீள்விக்கப்பட்டது