மஞ்சள் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| மஞ்சள் ஆறு Yellow River Huang He, Huang Jiang |
|
|---|---|
| முக்கிய நகரங்களூடாக மஞ்சள் ஆற்றின் பாய்ச்சல் | |
| மூலம் | பயன் ஹார் மலைகள், |
| வாயில் | பொஹாய் கடல் |
| பாயும் நாடுகள் | சீனா |
| நீளம் | 5464 கிமீ (3398 மைல்) |
| ஏற்றம் | 4500 மீ (14,765 அடி) |
| சராசரி வெளியேற்றம் | 2,571 மீ³/செ (90,808 அடி³/செ) |
| வடிநிலப்பரப்பு | 752 000 கிமீ² |
சீனாவின் லான்ஜௌ பகுதியில் மஞ்சள் ஆறு
மஞ்சள் ஆறு (சீன மொழி: 黃河, ஹுவாங் ஹ) சீனாவின் 2-வது நீளமானதும் உலகின் 6-வது நீளமானதும் ஆகும். மேற்கு சீனாவின் சிங்ஹாய் (Qinghai) மாகாணத்திலுள்ள பாயன் ஹர் மலைத்தொடரில் தோன்றி 9 மாகாணங்கள் வழியாக 5,464 கிமீ (3,398 மைல்) தொலைவு ஓடி பொகாய் கடலில் கலக்கிறது.
மஞ்சள் ஆறு சீன நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கேயே வட சீன நாகரிகம் தோன்றியது. இவ்வாற்றுப்பகுதி பழங்காலத்தில் மற்ற பகுதிகளை விட மிகவும் செழிப்பாக வளம் மிகுந்து இருந்தது. ஆனால் அடிக்கடி இவ்வாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனாவின் துயரம் என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது.
[தொகு] பெயர் காரணம்
இவ்வாற்று நீர் மஞ்சளாக இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. மஞ்சள் ஆற்றின் மேல் மற்றும் நடு பகுதியானது காற்றடு வண்டல் மேட்டு நிலப்பகுதியை கடந்து வருகிறது. இந்த காற்றடு வண்டலே மஞ்சள் நிறத்திற்கு காரணமாகும்.