ஜான் வெயின்
| ஜான் வெயின் | |
|---|---|
![]() வேக் ஆஃப் த ரெட் விட்ச்படத்தில் வெயின் (1948) |
|
| இயற் பெயர் | மாரியோன் ராபர்ட் மொரிசன் |
| பிறப்பு | மே 26, 1907 அயோவா, அமெரிக்க ஐக்கிய நாடுகள். |
| இறப்பு | சூன் 11 1979 (அகவை 72) லாஸ் ஏஞ்சல்ஸ்,கலிபோர்னியா, U.S. |
| வேறு பெயர் | மாரியோன் மிட்செல் மொரிசன்; ட்யூக்; ட்யூக் மொரிசன் |
| தொழில் | நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் |
| நடிப்புக் காலம் | 1926–1976 |
| துணைவர் | ஜோசபின் அலிசியா சேன்ஸ்(1933-1945) எஸ்பிரென்சா பௌர்(1946-1954) பிலார் பாலட்(1954-1979) |
| இணையத்தளம் | http://www.johnwayne.com |
மாரியோன் மிட்செல் மொரிசன் (Marion Mitchell Morrison, மே 26, 1907 – சூன் 11, 1979), இயற்பெயர்மாரியோன் ராபர்ட் மொரிசன், பரவலாக தமது திரைப்படப் பெயர் ஜான் வெயின் (John Wayne) என அறியப்பட்ட இவர் ஓர் புகழ்பெற்ற அமெரிக்க திரைப்பட நடிகர்,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தமது ஆண்மை வெளிப்பாட்டிற்காக பெயர்பெற்ற இவர் ஓர் அமெரிக்க சிறப்புக்கலைஞராக விளங்கினார். அவரது உயரம் மற்றும் குரலில் மயங்காதவர்கள் இல்லை.
அமெரிக்க திரைப்படக் கழகம் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த 100 கலைஞர்களில் பதின்மூன்றாவதாக இவரைக் குறிப்பிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டின் ஹாரிஸ் வாக்கெடுப்பில் அமெரிக்காவின் மக்கள் விரும்பும் திரைக்கலைஞர்களில் மூன்றாவதாகவும் மறைந்த ஒரே கலைஞராகவும் உள்ளார்.[1]
அரசியலில் அமெரிக்க இருத்தலியத்தை ஆதரித்த ஜான் வெயின் 1950களில் பொதுவுடமைக்கு எதிரான கொள்கைகள் கொண்டிருந்தார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ The Harris Poll: Denzel Washington: America’s Favorite Movie Star - Harris Interactive.
