பெண்களின் உரிமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெண்களின் உரிமைகள் என்பது அனைத்து வயதிலுமுள்ள பெண்கள், சிறுமியர் அனைவருக்குமான உரிமைகளையும் சுதந்திரங்களையும் குறிக்கிறது. இந்த உரிமைகள் நிறுவனப்படுத்தப்படாது இருக்கலாம். சட்டம், உள்ளூர் பழக்கங்கள், சமூகக் கட்டுப்பாடுகளால் தவிர்க்கப்பட்டோ மறுக்கப்பட்டோ இருக்கலாம். இந்த உரிமைகளும் சுதந்திரங்களும் ஆண்களை உள்ளடக்கிய மனித உரிமைகளின் விரிவான வரையறைகளிலிருந்து பிரித்து தனியே தொகுப்பது தேவையாகிறது; ஆண்களுக்கு இயல்பாக கொடுக்கப்படும் உரிமைகள் கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன. தன்னார்வலர்கள் சமூகத்தினால் பெண்களின் உரிமைகள் காலம் காலமாகவே புறக்கணிக்கப்பட்டு வருவதையும் பெண்கள் இந்த உரிமைகளைப் பெற ஓர் எதிர் சாய்நிலை அமைந்துள்ளதையும் சுட்டுகின்றனர்.[1]

பொதுவாக மறுக்கப்படும் மகளிர் உரிமைகள்[தொகு]

  • உடல் மற்றும் மன சுதந்திரம்
  • வாக்களிக்கும் உரிமை
  • அரசுப் பதவிகளை வகிக்கும் உரிமை
  • வேலை செய்ய உரிமை
  • வேலையில் சரியான,சமமான ஊதியம் பெறல்
  • சொத்துரிமை
  • கல்வி பெற உரிமை
  • இராணுவத்தில் பணியாற்றும் உரிமை
  • சட்ட ஒப்பந்தங்கள் செய்திட உரிமை
  • மணவாழ்வு,குழந்தை வளர்ப்பு மற்றும் சமய சுதந்திரம்[2]

இந்த உரிமைகளும் சுதந்திரங்களும் பெற மகளிரும் அவர்தம் ஆதரவாளர்களும் போராடி வந்துள்ளனர்; சில இடங்களில் சம உரிமை வேண்டி இன்னமும் போராடி வருகின்றனர்.[2]

பன்னாட்டு மற்றும் மண்டல சட்டங்கள்[தொகு]

மகளிருக்கெதிரான அனைத்து பாகுபாட்டையும் அகற்ற பொதுவிணக்க உடன்பாடு[தொகு]

பொதுவிணக்க உடன்பாட்டை ஏற்ற நாடுகள்
     ஒப்பிட்டு செல்லுபடியாக்கியவை     உடன்பட்டவை     உடன்பாடு செயலாக்கிய, ஏற்றுக்கொள்ளப்படாத நாடு      கையொப்பம் மட்டும் இட்டவை     ஒப்பிடாதவை

1948ஆம் ஆண்டு கைக்கொள்ளப்பட்ட அனைவருக்குமான மனித உரிமைகள் சாற்றுரை "ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை" வழங்குவதை உள்ளடக்கியுள்ளது.[3] இதனைத் தழுவி 1979ஆம் ஆண்டு ஐ.நாவின் பொது அவை மகளிருக்கெதிரான அனைத்து பாகுபாட்டையும் அகற்ற பொதுவிணக்க உடன்பாட்டை (CEDAW) நிறைவேற்றியது. பன்னாட்டு மகளிருக்கான உரிமைச் சட்டம் என விவரிக்கப்பட்ட இந்த உடன்பாடு செப்டம்பர் 3, 1981 அன்று செயலாக்கத்திற்கு வந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில் அமெரிக்க ஐக்கிய நாடு மட்டுமே இந்த உடன்பாட்டை இன்னும் செயலாக்கத்திற்கு கொண்டு வரவில்லை.

இந்த உடன்பாடு பெண்கள் பாகுபடுத்தப்படுவதை இவ்வாறு வரையறுத்துள்ளது:

Any distinction, exclusion or restriction made on the basis of sex which has the effect or purpose of impairing or nullifying the recognition, enjoyment or exercise by women, irrespective of their marital status, on a basis of equality of men and women, of human rights and fundamental freedoms in the political, economic, social, cultural, civil or any other field.

இதன் தமிழாக்கம்:

மகளிர்,அவரின் மணநிலை ஏதாவிருப்பினும், ஆண் பெண் சமநிலை என்ற கோட்பாட்டினை ஒட்டியும் மனித உரிமைகள் மற்றும் குடிமை,பண்பாடு,சமூகம்,பொருளியல் ,அரசியல் அடிப்படை உரிமைகளைக் கொண்டும் பாவிக்கும் மதிப்பு,உரிமை எவற்றையும் குறைக்கக்கூடிய,தவிர்க்கக்கூடிய எந்தவொரு வேறுபாடும் பாகுபாடு ஆகும்.

இந்த உடன்பாடு ஓர் செயலாக்கத் திட்டத்தினையும் முன்வைத்துள்ளது. இதனையொட்டி உடன்பாட்டில் ஒப்பிட்ட நாடுகள் தங்கள் நாட்டு சட்டங்களில் இருபால் சமத்துவம் இடம் பெறுமாறு செய்ய வேண்டும்;பாகுபாடு ஏற்படுத்தும் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும்; மகளிருக்கெதிரான பாகுபாட்டினை அகற்றிட புதுச்சட்டங்கள் இயற்ற வேண்டும். இத்தகைய பாகுபாட்டினை அகற்றிட உறுதி செய்யும் வகையில் பொது அமைப்புகளையும் நீதி அமைப்புகளையும் நிறுவிட வேண்டும். தனிநபர்கள்,நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் மகளிருக்கெதிரான வகையில் பாகுபாடு காட்டுவதை கண்காணித்து அவற்றை அகற்றிட செயலாற்றிட வேண்டும்.

மபுடோ நெறிமுறை[தொகு]

சூலை 11,2003 அன்று மொசாம்பிக்கின் மபுடோவில் நடந்த இரண்டாவது ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டில் மபுடோ நெறிமுறை என்று பரவலாக அறியப்படும் ஆபிரிக்க மகளிருக்கான உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான ஆபிரிக்க உரிமைமுறியின் நெறிமுறை நிறைவேற்றப்பட்டது.[4] ஆப்பிரிக்க ஒன்றியத்தில் தேவைப்பட்ட 15 உறுப்பினர் நாடுகள் செயலாக்கிய நிலையில் நவம்பர் 25,2005 அன்று நடப்பிற்கு வந்தது.[5] இந்த நெறிமுறை பெண்களுக்கு அரசியலில் ஈடுபட,சமூக மற்றும் அரசியல் சமத்துவம், கருத்தரிப்பு சுதந்திரம் மற்றும் தங்கள் பாலுறுப்பு மாற்றத்திற்கு முடிவு காணல் என முழுமையான உரிமைகளை உறுதிப்படுத்துகிறது.[6]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hosken, Fran P., 'Towards a Definition of Women's Rights' in Human Rights Quarterly, Vol. 3, No. 2. (May, 1981), pp. 1-10.
  2. 2.0 2.1 Lockwood, Bert B. (ed.), Women's Rights: A "Human Rights Quarterly" Reader (Johns Hopkins University Press, 2006), ISBN 9780801883743
  3. "Universal Declaration of Human Rights".
  4. African Union: Rights of Women Protocol Adopted, பத்திரிகைக் குறிப்பு, பன்னாட்டு மன்னிப்பு அவை, 22 சூலை 2003
  5. UNICEF: toward ending female genital mutilation, பத்திரிகைக் குறிப்பு, UNICEF, 7 பெப்ரவரி 2006
  6. The Maputo Protocol of the African Union, brochure produced by GTZ for the German Federal Ministry for Economic Cooperation and Development

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெண்களின்_உரிமைகள்&oldid=1749011" இருந்து மீள்விக்கப்பட்டது