பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு இளம் தமிழ்ப் பெண்

பெண் (woman) என்னும் சொல் பல பொருள்களில் பயன்படுகின்றது. பால் பகுப்பில் பெண் பால் எல்லா உயிரினங்களினதும் பெண்[1]." பாலாரை வயது வேறுபாடின்றிக் குறிக்கப் பயன்படுகின்றது.

ஆங்கிலத்தில் "பெண்" என்ற உச்சரிப்பு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விம்பானா, 'wīfmann[2] என்றும் பின்னர் வும்மான (wīmmann to wumman) என்றும் சொல்லிருந்து மருவி  விம்மனுக்கும்,[3] இறுதியாக உச்சரிப்புடைய விம்மன் என்ற மாறியது (பெண்ணுக்கும்) அது பழைய ஆங்கிலத்தில், விபெய்ன் "பெண் மனிதனை" குறிக்கிறது,என்றும் கருத்து உண்டு.

பெண் என்ற சொற்பதம் "கருப்பை" என்று சொல்லோடு தொடர்புடையது.இந்த உறுப்பின் செயல்பாடு கருவை பாதுகாப்பதாகும் "கம்மி" என்பது பழைய ஆங்கில வார்த்தையான wambe என்பதன் அர்த்தம் "வயிறு" (நவீன ஜெர்மன் மத்திய கால மொழியிலிருந்த "வாம்பே" என்ற பேச்சுவழக்கு வார்த்தையை ("potbelly") என்று ஆங்கிலத்தில் (women) அழைக்கபடுகிறது.

உயிரியல் பெயர்[தொகு]

கிரேக்கத்தில் கிரகமும் தெய்வமும் வீனஸ் அல்லது அப்ரோடிட் சின்னமாக பெண் பாலினத்திற்கான உயிரியலில் பயன்படுத்தப்படுகிறது.[4] இது கடவுளின் வீனஸ் கையில் - கண்ணாடி அல்லது தேவதையின் ஒரு சுருக்க குறியீடாக ஒரு பகட்டான பிரதிநிதித்துவம் ஆகும். வீனஸ் சின்னம் பெண்மையைகுறிக்கும் என்றும் பண்டைய செம்பு க்காகவும் இருந்தது. ஒரு புள்ளியில் இருந்து (ஆவி குறிக்கும் ஒரு புள்ளியில் இருந்து (சமச்சீரற்ற குறுக்குவழியைக் குறிக்கும்) சின்னத்தை உருவாக்கியது.

வயது வேறுபாடு இல்லாச் சொற்கள்[தொகு]

மனித இனத்திலும், பெண்ணுரிமை,[5] பெண்ணியம் போன்ற சொற்கள் வயது வேறுபாடு இன்றி எல்லாப் பெண்களையும் குறிப்பதைக் கவனிக்கலாம். எனினும் பொது வழக்கில் பெண் எனும்போது அது வளர்ச்சியடைந்த மனித இனத்துப் பெண்பாலாரையே பெரும்பாலும் குறிக்கும். அது சிறிய வயது சிறுமியும் குறிக்கும் சொல் தமிழ்யில் பொதுவாக குறிக்கப்படுகிறது. ஆனால் சங்க கால இலக்கியம் மற்றும் பழந்த தமிழ்யில் பல் வேறுபட்ட வயது கருத்தில் கொண்டு எழுதப்பட்டது.

வயதும் பெண்களைக் குறிக்கும் சொற்களும்[தொகு]

தமிழில், மனிதப் பெண்களின் பல்வேறு பருவங்களைக் குறிக்க வெவ்வேறான சொற்கள் இருந்தன. தற்போது இத்தகைய சொற்கள் பயன்பாட்டில் இல்லை.

  1. 0 – 12 வயதுப் பெண் - பேதை.
  2. 12 – 24 வயதுப் பெண் - பெதும்பை.
  3. 24 – 36 வயதுப் பெண் - மங்கை.
  4. 36 – 48 வயதுப் பெண் - மடந்தை.
  5. 48 – 60 வயதுப் பெண் - அரிவை.
  6. 60 – 72 வயதுப் பெண் - தெரிவை.
  7. 72 வயதுக்கு மேல் பெண் - பேரிளம்பெண்

இப் பிரிவுகள் உடலியல் மாற்றங்களையும், சமுதாய நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. இவைகளைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டு எழுதி உள்ளன.

சங்க காலத்தில் பெண்ணின் பருவங்களுக்குரிய வயது கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டது.

1. பேதை : 5 முதல் 8 வயது

2. பெதும்பை : 9 முதல் 10 வயது

3. மங்கை : 11 முதல் 14 வயது

4. மடந்தை: 15 முதல் 18 வயது

5. அரிவை: 19 முதல் 24 வயது

6. தெரிவை: 25 முதல் 29 வயது

7. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது

'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப் பாற்படு மகளிர் பருவக் காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’ - பன். பாட். 220

‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’ ’’ 221

‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’ ’’ 222

‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத் திரண்ட பதினா லளவும் சாற்றும்.’ ’’ 223

‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத் திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’ ’’ 224

‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’ ’’ 225

‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’ ’’ 226

‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36) பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’ ’’ 227

சிறுமியும், கன்னிப்பெண்ணும்[தொகு]

பிறந்த முதல் பருவம் அடையும் வரை அதவது 0 முதல் 8 வயது வரை சிறுமிகள் எனப்படுவர் இந்த வயதில் இவர்களுக்கு பெண்களுக்கு உரிய வளர்ச்சி இருக்கும்.கன்னி எனறால் பெண்கள் பருவம் அடைந்து திருமணம் ஆகும் வரை நிலை கன்னி என்று அழைக்கப்படுவர்கள்.பெண் எனறால் அவள் திருமணம் ஆகி குழந்தை பேறு பெற்றவர்கள் பெண் என்று அழைக்கப்படுவர்கள்.

இவை தவிர சிறுவயதுப் பெண்ணைப் பொதுவாகச் சிறுமி என்றும், திருமணம் ஆகாத பெண்களைக் கன்னி என்றும் குறிப்பது உண்டு. பொதுவாகச் சிறுமி நிலையைத் தாண்டியவர்கள் பெண்கள் கருதுவதும் சமுதாயத்தில் அழைக்கபட்டு வருகிறது.

பருவ மாற்றம்[தொகு]

குழந்தைப் பருவத்திற்கும், வளர்ச்சி முற்றுப் பெற்ற பருவத்திற்கும் இடைப்பட்ட காலத்தை வளரிளம் அல்லது பருவ வயது என்று கூறுகிறோம், 9 வயது முதல் வயது 16 வரையிலான காலம் தான் வளரிளம் பருவ வயதுக் காலம் ஆகும் [6]. தன்னுடைய உடல் மற்றும் மன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பருவம் இது. இந்த பருவத்தில் எடையும், உயரமும் மிக வேகமாக அதிகரிக்கின்றது. இந்த பருவத்தில்தான் நோய்களில் இருந்து பாதுகாப்பு, மனம் மற்றும் சமுதாய நலன்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஒரு பெண் தன்னுடைய வாழ்கை ஆரோக்கியமான வாழ்வை பெற உணவு, உடை, தன்சுத்தம், பாதுகாப்பான சுற்றுப்புற சூழ்நிலையில் வாழ்வது பற்றி அதிகமாக அறிந்து இருக்க வேண்டும்.

பெண்களின் உடல் மற்றும் அதன் செயல்களின் ஏற்படும் மாற்றம்[தொகு]

உடலாலும், மனதாலும் மிக வேகமாக மாறுதல்களை சந்திக்கும் பருவம் இந்த வளரிளம் பருவம். இயக்குநீர்கள் சுரப்பில் ஏற்படும் மாறுதல்களால் பால்[7] உறுப்புகளின் வளர்ச்சியும், உருவ அமைப்பில் மாறுதல்களும் ஏற்படுகின்றன.

உடல் அளவு[தொகு]

உடலின் பிற பாங்களைவிட தோள் பகுதி, கால்கள், பாதங்கள் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. உடல் அமைப்பில் இடுப்பு நன்கு அகன்றும், வயிற்றுப் பகுதி சிறுத்தும் மாற்றம் பெறும். வயிறு, புட்டம், கால்களில் கொழுப்புச் சேர்ந்து உடல் வளர்ச்சி பெறும். இவை சாதாரணமாக ஏற்படும் மாற்றமாகும். இதனால் பெண்களுக்கு உரிய உடல் அமைப்பு ஏற்படுகிறது.

தோல்[தொகு]

தோல் எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படும். இக்காலத்தில் சுரப்பிகளும் வளர்ச்சியடைந்து இந்த நிலை ஏற்படுகிறது. இதனால் வளரிளம் பருவத்தில் முகத்தில் அதிகமாக பருக்கள் ஏற்படுகிறது.

மாதவிடாய்[தொகு]

பெண்கள் 9வயது முதல் 16 வயதுக்குள் பருவமடைகின்றனர்.இக்காலத்தில் மாதவிடாய் சுழற்சி அல்லது மாதவிடாய் காலம் தொடங்குகிறது மாதவிடாய்ச் சுழற்சி என்பது பருவம் அடைந்த மகளிர் அனைவருக்கும் வயது காலத்தில் நடக்கும் சாதாரணமான விஷயம். பெரும்பாலும் இக்காலத்தில் பெண்கள் ஆக்க பூர்வமாகவும் செயல்படமுடிகிறது. இந்த சமயத்தில் ஆயத்த மாதவிடாய் பஞ்சு, சுத்தமான துணிகளையே பயன்படுத்த வேண்டும்.

இனப்பெருக்கத்தில் பெண்களின் பங்கு[தொகு]

பெண்களின் இனப்பெருக்கத் தொகுதி

பெண்களின் இனப்பெருக்க ஆற்றல் என்றும் இதனைச் சொல்லலாம். பிரசவம், பெண்களின் குழந்தைப் பேறு அம்சம்தான் பெண்களால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்படும் முக்கியமான பங்கு ஆகும்[8] மனித இனப்பெருக்கத்திற்கு பெண்கள் தான் மூல ஆதாரம். இவர்கள் குழந்தை பிறப்பு, தாய்ப்பாலூட்டல், பாரமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, உணவு, நோய் தொற்று வழங்கல் போன்ற பல்வேறுபட்ட பொறுப்புக்களை பெண்கள் செய்கிறார்கள்.

பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் நிலை[தொகு]

இயற்கையின் படைப்பில், மனித சமுதாயம் என்பது ஆண், பெண் என்று இருவரும் சேர்ந்து உள்ள ஒரு சமுதாய அமைப்பு ஆகும். பிறப்பு வீதம், இறப்பு வீதம் இரண்டிலும் ஆண், பெண் ஒரேயளவில் உள்ளது. இவர்களின் உடல் அமைப்பைத் தவிர வேறு எந்த விதத்திலும் வேறுபாடுகள் இல்லை. ஆனால் குழந்தை பிறந்து பின், வளரும் காலங்களில் பல வழிகளில் பல காரணமாக இன வேறுபாடு பேணப்படுகின்றன. இதனால் பெண்களின் உரிமைகள், கல்வி, உணவு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவை மறுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும்கூட பெண்கள் தங்களின் பங்களிப்பையும் செய்து வருகிறார்கள்.

பெண்களின் உரிமைகள்[தொகு]

அடிப்படையில் மனித இனம் ஒருவருக்கு ஒருவர் எந்த வகையான வேறுபாடுகள் கொள்ளவதற்காக எந்த வகையில் நியாயமில்லை. ஒருவரின் உரிமையில் மற்ற ஒருவர் தலையிடுவதற்கு உரிமையில்லை. எனவே அடுத்தவர்கள் உரிமையில் குறுக்கிடுவது என்பது மனித உரிமை மீறலே. இந்த சமூக அமைப்பில் பெண்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு, நசுக்கப்பட்டு அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. பெண்களின் உரிமைகள் என்பது[9] அவர்களின் உயிருடன் நெருங்கிய தொடர்புடையது. அவர்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்கு அனைத்து விதமான உரிமைகள் உள்ளது, சுரண்டல்களிருந்து விடுபட மற்றும் ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுபட ஜக்கிய நாடுகளின் அவை மூலம் 1986 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமை சாசனம் இயற்றப்பட்டது.

பெண்கல்வி[தொகு]

பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் படம்

பெண் கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும், பண்டைய காலத்தில் அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று ஒரு சொல் வழக்கு உண்டு. இது ஆண் அதிகாரத்தை காண்பிக்கிறது. ஒரு பெண் படித்தால் தான் ஒரு குடும்பம் நன்றாக இருக்கும். அந்த குடும்பம் மட்டும் அல்ல அந்த நாடும் நலமாக இருக்கும். நாட்டில் எத்தனையோ பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலை செய்கிறர்கள்.

பெண்களும் வறுமையும்[தொகு]

வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்

உலகின் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் 75 சதவிகிதம் முதல் 90% வரை பெண்கள் செய்கின்றனர். அத்துடன் ஜா.நா சபையின் கூற்றுப்படி உலகின் எந்த நாட்டிலும் வீட்டுவேலையில் பெண்கள் செலவிடும் நேரத்தில் ஒருபகுதி கூட ஆண்கள் செய்வது இல்லை. ஆனால், பெண்ணிய இயக்கங்கள் முயன்றும் இந்த நிலையைக் களைய முடியவில்லை. மிகுந்த வளர்ந்த நாடுகளில் கூட முடியவில்லை. உலகில் வயது வந்த மக்கள் தொகையில் மூன்றுக்கும் இரண்டு பேர் பெண்கள். உலகின் மூன்றில் இரண்டு பங்கு வேலைகளை பெண்கள் செய்கினறனர். உலக வருமானத்தில் 10 சதவிகித விழுக்காடு மட்டும் பெறுகிறார்கள்.[10]

பெருபான்மையான பெண்கள் ஊதியமற்ற வீட்டுவேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் ஊதியம் பெறும் வேலைக்கு செல்லமுடிவதில்லை. இருந்தாலும் அவர்கள் பணிக்கு சென்றால், குறைவான ஊதியம்தான் பெறமுடிகிறது. மேலும் பாதுகாப்புப் இல்லை. பெண்கள் ஆண்களைவிட குறைவாகவே ஊதியம் பெறும் நிலைகளை இந்த சமுதயாம் ஏற்படுத்தி உள்ளது.[11]

குப்பை சேகரிக்கும் பெண்

தாவரங்களிலும் விலங்குகளிலும் பெண் என்னும் சொல்[தொகு]

பெண் பனை, ஆண் பனை என்று தாவரங்களிலும், பெண் யானை (பிடி) ஆண் யானை (களிறு) என்று விலங்குகளிலும் பெண் என்னும் சொல் பெண்பாலைக் குறிக்கப் பயன்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sexual Orientation and Gender Expression in Social Work Practice, edited by Deana F. Morrow and Lori Messinger (2006, ISBN 0231501862), page 8: "Gender identity refers to an individual's personal sense of identity as [man] or [woman], or some combination thereof
  2. "wīfmann": Bosworth & Toller, Anglo-Saxon Dictionary (Oxford, 1898–1921) p. 1219. The spelling "wifman" also occurs: C. T. Onions, Oxford Dictionary of English Etymology (Oxford, 1966) p. 1011
  3. Webster's New World Dictionary, Second College Edition, entry for "woman".
  4. Jose A. Fadul. தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் தியரி அண்ட் பிராக்டிஸ் இன் சைகோதெரபி & கவுன்சலிங் ப. 337
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-08-09. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  6. Berk,Laura E(2004)ːChild Development, Sixth Edition Pearson-longmanːDelhi
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  8. http://www.ncpcr.gov.in/view_file.php?fid=434
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  10. ரிச்சர்டு ராபின்சன், உலகபிரச்னைகள் முதலாளித்துவக் கலாச்சாரமும், (குளோபல் பிராப்ளம்ஸ் அண்ட் கல்ச்சர் ஆஃப் கேபிடலிஸம் 1999 )page.354
  11. யுனிசெப், உலக குழந்ததைகளின் நிலை 2007,பக்.36.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்&oldid=3889007" இலிருந்து மீள்விக்கப்பட்டது