அங்கேரி மீதான இரண்டாவது மங்கோலியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்கேரி மீதான இரண்டாவது மங்கோலியப் படையெடுப்பு என்பது 1285-86ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு படையெடுப்பாகும். இதில் மங்கோலியத் தாக்குதலானது முறியடிக்கப்பட்டது. அங்கேரியர்கள் வெற்றி பெற்றனர்.

அங்கேரி மீதான இரண்டாவது மங்கோலியப் படையெடுப்பு
மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பின் ஒரு பகுதி

"அலங்கரிக்கப்பட்ட நூலில்" 1285இல் அங்கேரியில் மங்கோலியர்கள். இடது பக்கம் பிடிக்கப்பட்ட பெண்களுடன் குதிரையிலிருந்து இறங்கியுள்ள மங்கோலியர்கள், வலது பக்கம் காப்பாற்றப்பட்ட பெண்களுடன் அங்கேரியர்கள்.
நாள் 1285–1286
இடம் அங்கேரி இராச்சியம்
அங்கேரிய வெற்றி; தங்க நாடோடிக் கூட்டத்தின் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.
பிரிவினர்
தங்க நாடோடிக் கூட்டம்
(மங்கோலியர்)
கலிசிய-வோலினிய இராச்சியம்
அங்கேரி இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
நோகை கான்
தலபுகா
கலிசியாவின் மன்னன் முதலாம் லியோ
அங்கேரியின் மன்னன் நான்காம் லாடிசுலவுசு
உரோலன்ட் போர்சா
சியார்சு பக்சா
அமேதியசு அபா
பேதுரு அபா
இவாங்கா அபா 
பலம்
30,000–50,000[சான்று தேவை] ~30,000[சான்று தேவை]
இழப்புகள்
கிட்டத்தட்ட முழுப்படையும் கொல்லப்பட்டது/பிடிக்கப்பட்டது[1][not in citation given] குறைவு[சான்று தேவை]

விளைவு[தொகு]

இந்தப் படையெடுப்பின் முடிவானது 1241ஆம் ஆண்டின் முதல் படையெடுப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. படையெடுப்பானது முறியடிக்கப்பட்டது. பல மாத பட்டினி, ஏராளமான சிறு ஊடுருவல்கள் மற்றும் இரண்டு முக்கியமான இராணுவத் தோல்விகள் காரணமாக மங்கோலியர்கள் தங்களது படையில் பெரும்பாலானவற்றை இழந்தனர். இதற்கு முக்கியக் காரணம் புதிய கோட்டை அமைப்புகள் மற்றும் இராணுவ சீர்திருத்தங்கள் அங்கேரியர்களால் மேற்கொள்ளப்பட்டதேயாகும். 14ஆம் நூற்றாண்டு வரை தங்க நாடோடிக் கூட்டத்திலிருந்து சிறிய ஊடுருவல்கள் அடிக்கடி நடைபெற்ற போதும், 1285ஆம் ஆண்டின் இந்தப் படையெடுப்பின் தோல்விக்குப் பிறகு முக்கியமான எந்த ஒரு படையெடுப்பும் அங்கேரி மீது மங்கோலியர்களால் நடத்தப்படவில்லை. இது நடந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே போலந்து மீதான மூன்றாவது படையெடுப்பை மங்கோலியர்கள் நடத்தினர். இந்தப் படையெடுப்பும் முறியடிக்கப்பட்டது. 1285ஆம் ஆண்டில் அங்கேரியர்கள் பயன்படுத்திய அதே உத்தியைப் போலந்துக்காரர்களும் பயன்படுத்தினர். போலந்துக்காரர்களுக்குச் சியார்சு பக்சா தலைமையிலான ஒரு அங்கேரியப் படையானது உதவி செய்தது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. Jackson p.209
  2. Krakowski, p. 217-218.

உசாத்துணை[தொகு]