அக்னி (ஏவுகணை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அக்னி ஏவுகணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அக்னி-I/அக்னி-II/அக்னி-III/அக்னி-IV
வகை நடுத்தர தூர ஏவுகணை (அக்னி-I)
இடைத்தர தூர ஏவுகணை (அக்னி-II, அக்னி-III, அக்னி-IV)
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை (அக்னி-V)
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது (சோதனைகள்) 04/11/99, 01/17/01 மற்றும் 08/29/04
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர் Defence Research and Development Organisation (DRDO), Bharat Dynamics (BDL)
ஓரலகுக்கான செலவு ரூ 250-350 மில்லியன் அல்லது $5.6-7.9 மில்லியன்[1]
அளவீடுகள்
எடை 12,000 கிகி (அக்னி-I)
16,000 கிகி (அக்னி-II)
17,000 கிகி (அக்னி-V)[2]
நீளம் 15 மீ (அக்னி-I)
20 மீ (அக்னி-II)
16 மீ (அக்னி-III)
17 மீ (அக்னி-V)[3]
விட்டம் 1.0 மீ (அக்னி-I, அக்னி-II)
2.0 மீ (அக்னி-III, அக்னி-V)

வெடிபொருள் Strategic nuclear (15 KT to 250 KT), conventional HE-unitary, penetration, sub-munitions, incendiary or fuel air explosives

இயந்திரம் தனி அடுக்கு (அக்னி-I)
இரண்டரை அடுக்கு (அக்னி-II)
இரண்டு அடுக்குகள் (அக்னி-III)
மூன்று அடுக்குகள் (அக்னி-V) திட எரிபொருள் பொறி
இறக்கை அகலம் தெரியவில்லை
இயங்கு தூரம் 850 கிமீ (அக்னி-I)
2000 கிமீ (அக்னி-II)
3000-3500 கிமீ (அக்னி-III)
3500-4000 கிமீ (அக்னி-IV)
5000 கிமீ (அக்னி-V)
பறப்பு உயரம் > 300 கிமீ (அக்னி-I)
230 கிமீ (அக்னி-II)
350 கிமீ (அக்னி-III)
800 கிமீ (அக்னி-V)
வேகம் 2.5 கிமீ/வினாடி (அக்னி-I)
3.5 கிமீ/வினாடி (அக்னி-II)[4]
வழிகாட்டி ஒருங்கியம் Strap Down - INS (Inertial Navigation System), optionally augmented by Global Positioning System]] terminal guidance with possible radar scene correlation
ஏவு தளம் 8 x 8 Tatra TELAR (Transporter erector launcher) Rail Mobile Launcher

அக்னி ஏவுகணை (அக்னி ஏவுகணை, சமஸ்கிருதம்:अग्नि, "நெருப்பு") என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும். 2007 ஆம் ஆண்டு வரையில் அக்னி திட்டத்தில் பின்வரும் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன: அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest), அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்]. உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது. 1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 3000 கி.மீ. பயணம் செய்யும் அக்கினி-3பரிசோதிக்கப்பட்டது. 2012 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. பயணம் செய்யும் அக்கினி-5 பரிசோதிக்கப்பட்டதன் மூலம், பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..

  1. அக்னி-I குறுகிய (short) தூரம் பாயும் ஏவுகணை, 700- 800 கிமீ தூரம்,
  2. அக்னி-II நடுத்தர (medium) தூரம் பாயும் ஏவுகணை, 2000- 2,500 கிமீ தூரம்,
  3. அக்னி-III இடைத்தர (intermediate) தூரம் பாயும் ஏவுகணை, 3,500- 5,000  கிமீ தூரம்.
  4. அக்னி-IV இடைத்தர (intermediate) தூரம் பாயும் ஏவுகணை, ~3,000 கிமீ தூரம்
  5. அக்னி-V கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை, ~5,000- 6,000 கிமீ தூரம்
Agni ATTACHING MAP.jpg

இத்திட்டத்தின் முதலாவது ஏவுகணை 1989 ஆம் ஆண்டு சோதிக்கப்பட்டது. இது 1,000 கிகி போர் ஆயுதத்தை அல்லது அணுவாயுதத்தைத் தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது.

அக்னி I மற்றும் அக்னி II என்பன சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றைக் குறி பார்த்து ஏவக்கூடியவை. அக்னி II சீனாவின் மேற்கு, நடு, மற்றும் தெற்குப் பகுதிகளை சென்றடையக்கூடியன. அக்னி III ஏவுகணை 3500 கிமீ தூரம் பாயக்கூடியவை. இது சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், மற்றும் ஷங்காய் ஆகியவற்றத் தாக்கக்கூடியன.

அக்னி-III முதலில் ஜூலை 9, 2006 இல் ஒரிசாவின் வீலர் தீவில் சோதிக்கப்பட்டது. அப்போது அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது. அத பின்னர் அக்னி III மீண்டும் அதே இடத்தில் இருந்து ஏப்ரல் 12, 2007 இல் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. மே 7, 2008 இல் இந்தியா மீண்டும் அக்னி III ஐ வெற்றிகரமாகச் சோதித்து உலகின் வல்லரசுகளின் பட்டியலில் இடம்பெற்றது.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அக்னி_(ஏவுகணை)&oldid=1372194" இருந்து மீள்விக்கப்பட்டது