1850
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1820கள் 1830கள் 1840கள் - 1850கள் - 1860கள் 1870கள் 1880கள் |
| ஆண்டுகள்: | 1847 1848 1849 - 1850 - 1851 1852 1853 |
| 1850 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1850 MDCCCL |
| திருவள்ளுவர் ஆண்டு | 1881 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2603 |
| சீன நாட்காட்டி | 4546-4547 |
| எபிரேய நாட்காட்டி | 5609-5610 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1905-1906 1772-1773 4951-4952 |
| இரானிய நாட்காட்டி | 1228-1229 |
| இசுலாமிய நாட்காட்டி | 1266 – 1267 |
| ரூனிக் நாட்காட்டி | 2100
|
1850 (MDCCCL) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- சனவரி 29 – அமெரிக்க காங்கிரசில் 1850 இன் உடன்பாட்டை ஹென்றி கிளே அறிமுகப்படுத்தினார்.
- பெப்ரவரி 28 - யூட்டா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- மார்ச் 19 – அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆரம்பிக்கப்பட்டது.
- ஏப்ரல் 19 – நிக்கராகுவாவைத் தமக்குள் பங்கிட வழி வகுக்கும் கிளைட்டன்-புல்வார் உடன்பாடு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்க்ம் இடையில் எட்டப்பட்டது.
- ஜூலை 3 - கோஹினூர் வைரம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
- செப்டம்பர் 9 - கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்காவின் 31வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
- அக்டோபர் 1 - சிட்னி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
நாள் அறியப்படாதவை [தொகு]
- பிரான்ஸ் அல்ஜீரியாவுக்கு குடியேறிகளை அனுப்ப ஆரம்பித்தது.
- 144,000 இந்தியத் தொழிலாளர்கள் டிரினிடாடுக்கும், 39,000 இந்தியர்கள் யமேக்காவுக்கும் சென்றனர் (1850-1880)
- லேமன் பிரதர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
- முதலாவது இரண்டு மாடி வீடு யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- ஏப்ரல் 23 - வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஆங்கிலக் கவிஞர் (பி. 1770)