டிசம்பர் 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | டிசம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
| MMXIII | ||||||
டிசம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 353வது நாளாகும். நெட்டாண்டுகளில் 354வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 12 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 324 - லிசீனியஸ் ரோமப் பேரரசன் பதவியைத் துறந்தான்.
- 1154- இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றி முடிசூடினான்.
- 1606 - ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.
- 1871 - யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் (ordination) வழங்கப்பட்டன.
- 1877 - யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்தனர்.
- 1907 - பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 பேர் கொல்லப்பட்டனர்.
- 1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.
- 1941 - அடொல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத் தலைவர் ஆனார்.
- 1961 - போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
- 1963 - சன்சிபார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தான் ஹமூட் பின் முகமது தலைமையில் முடியாட்சியைப் பெற்றது.
- 1967 - இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- 1972 - சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.
- 1983 - உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.
- 1984 - ஹொங்கொங்கின் ஆட்சியை ஜூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியாவோபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.
- 1986 - சோவியத் எதிர்ப்பாளி அந்திரேய் சாகரொவ் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
- 1997 - இந்தோனீசியாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.
- 1997 - டைட்டானிக் திரைப்படம் வெளியானது.
- 2000 - யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1901 - ருடால்ப் ஹெல், ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் (இ. 2002)
- 1906 - லியோனிட் பிரெஷ்னேவ், சோவியத் ஒன்றியத் தலைவர் (இ. 1982)
- 1922 - கே. அன்பழகன், தமிழக அரசியல்வாதி
- 1934 - பிரதிபா பாட்டீல், இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர்
- 1974 - ரிக்கி பொன்ரிங், அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
சிறப்பு நாள் [தொகு]
- கோவா - விடுதலை நாள்