ஆகஸ்டு 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆகஸ்ட் 5 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்ட் 5 கிரிகோரியன் ஆண்டின் 217வது நாளாகும். நெட்டாண்டுகளில் 218வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 148 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1100 - இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி முடி சூடினான்.
- 1305 - இங்கிலாந்துக்கு எதிராகக் கிளர்ச்சிக்குத்தலைமை வகித்த வில்லியம் வொலஸ் கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
- 1583 - சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜோன்ஸ், நியூபவுண்லாந்தில் அமைத்தார்.
- 1689 - 1,500 இரக்கேசுக்கள் கியூபெக்கின் லாச்சின் நகரைத் தாக்கினர்.
- 1806 - இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.
- 1870 - புருசியர்களுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் புருசியா வெற்றி பெற்றது.
- 1884 - விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.
- 1914 - ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தைல் கைச்சாத்திட்டன.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: லாத்வியா சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ட்ரொய்னா என்ற இடத்தில் போர் இடம்பெற்ற போது காலை 11:00 மணிக்கு எட்னா மலை வெடித்தது. இதன் புகை மண்டலம் பல மைல் உயாரத்துக்குக் கிளம்பியது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 545 ஜப்பானிய போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் செல்ல எத்தனித்தனர்.
- 1944 - போலந்து தீவிரவாதிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்த ஜேர்மனிய தொழிற் பண்ணையொன்றில் இருந்து 348 யூதர்களை விடுவித்தனர்.
- 1949 - எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6000 பேர் கொல்லப்பட்டனர். 50 நகரங்கள் அழிந்தன.
- 1960 - புர்கினா பாசோ (அப்பர் வோல்ட்டா) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1962 - 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.
- 1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்ஜெலீசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
- 1963 - ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.
- 1969 - மரைனர் 7 செவ்வார்க் கோளிக்கு மிகக் கிட்டவாக (3,524 கிமீ) சென்றது.
- 1979 - ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.
- 1989 - நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.
- 2003 - இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
- 2006 - வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் (ஆகஸ்ட் 4 நள்ளிரவில்) இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1850 - மாப்பசான், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1893)
- 1908 - ஹரல்ட் ஹோல்ட், ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமர் (இ. 1967)
- 1923 - தேவன் நாயர், சிங்கப்பூர் அதிபர்
- 1930 - நீல் ஆம்ஸ்ட்றோங், சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர்
- 1968 - நளாயினி தாமரைச்செல்வன், ஈழத்து எழுத்தாளர்
- 1968 - மரீன் லெ பென், பிரெஞ்சு அரசியல்வாதி
- 1975 - கஜோல், இந்தித் திரைப்பட நடிகை
- 1987 - ஜெனிலியா, இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள் [தொகு]
- 1895 - பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மாக்சியத் தத்துவவியலாளர் (பி. 1820)
- 1962 - மாரிலின் மன்றோ, அமெரிக்க நடிகை (பி. 1926)
- 1984 - றிச்சார்ட் பேர்ட்டன், ஆங்கிலேய நடிகர் (பி. 1925)
- 1991 - சொயிச்சீரோ ஹொண்டா, ஹொண்டா நிறுவனத்தின் தாபகர் (பி. 1906)
சிறப்பு நாள் [தொகு]
- புர்கினா பாசோ - விடுதலை நாள் (1960)