ஜனவரி 11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சனவரி 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
ஜனவரி 11 கிரிகோரியன் ஆண்டின் 11வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1055 - தியோடோரா பைசண்டைன் பேரரசியாக முடி சூடினாள்.
- 1569 - முதலாவது குலுக்குச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.
- 1693 - சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மோல்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.
- 1779 - மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
- 1782 - பிரித்தானியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ தலைமையில் திருகோணமலையைக் கைப்பற்றினர்.
- 1787 - யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- 1805 - மிச்சிகன் பிரதேசம் அமைக்கப்பட்டது.
- 1851 - சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
- 1879 - ஆங்கிலோ-சூளு போர் ஆரம்பமானது.
- 1878 - பால் முதற்தடவையாக புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.
- 1911 - காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மவுலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.
- 1922 - நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நெதர்லாந்தின் மீது போரை அறிவித்தது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
- 1943 - ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் சீனாவின் மீதான நில உரிமையை இழந்தன.
- 1946 - என்வர் ஹோக்ஸா அல்பேனியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.
- 1957 - ஆபிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.
- 1962 - பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
- 1972 - கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1998 - அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள் [தொகு]
- 1924 - ரொஜர் கிலெமின், நோபல் பரிசு பெற்றவர்
- 1953 - ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, இலங்கையை அரசியல்வாதி (இ. 2008)
- 1973 - ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1932 - திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)
- 1966 - லால் பகதூர் சாஸ்திரி, 3வது இந்தியப் பிரதமர் (பி. 1904)
- 1968 - ஐசடோர் ஐசாக் ராபி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1898)
- 1975 - நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)
- 1976 - ஏரம்பு சுப்பையா, இலங்கையின் நடன ஆசிரியர்
- 1983 - பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1894)
- 1991 - கார்ல் ஆன்டர்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1905)
- 2007 - எருவில் மூர்த்தி, ஈழத்துக் கவிஞர்
- 2008 - எட்மண்ட் ஹில்லரி, நியூசிலாந்து மலையேறுநர் (பி. 1919)