1805
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1770கள் 1780கள் 1790கள் - 1800கள் - 1810கள் 1820கள் 1830கள் |
| ஆண்டுகள்: | 1802 1803 1804 - 1805 - 1806 1807 1808 |
| 1805 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1805 MDCCCV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1836 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2558 |
| சீன நாட்காட்டி | 4501-4502 |
| எபிரேய நாட்காட்டி | 5564-5565 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1860-1861 1727-1728 4906-4907 |
| இரானிய நாட்காட்டி | 1183-1184 |
| இசுலாமிய நாட்காட்டி | 1219 – 1220 |
| ரூனிக் நாட்காட்டி | 2055
|
1805 (MDCCCV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மார்ச் 4 - தொமஸ் ஜெபர்சன் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஏப்ரல் 26 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்ன் நகரைக் கைப்பற்றினர்.
- மே 23 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.
- ஜூன் - ஐக்கிய அமெரிக்காவுக்கும் திரிப்பொலிக்கும் இடையில் போர் முடிவடைந்தது.
- ஜூன் 11 - டிட்ராயிட் நகரம் தீயில் முழுவதுமாக அழிந்தது.
- ஜூலை 31 - இந்திய விடுதலைப் போராட்ட வீரனூம் குறுநில மன்னனுமான தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டான்
- அக்டோபர் 17 - நெப்போலியனின் போர்கள்: ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில் ஆஸ்திரியப் படையினர் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகளிடம் வீழ்ந்ட்ய்ஹன.
- டிசம்பர் 2 - நெப்போலியனின் போர்கள்: நெப்போலியன் பொனபார்ட்டின் தலைமையிலான பிரெஞ்சுப் படைகள் ரஷ்ய-ஆஸ்திரியக் கூட்டுப் படைகளை ஆஸ்டர்லிட்ச் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றனர்.
நாள் அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- சுவீடன் பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.
- பாரிசில் கே. சான்செல் என்பவர் முதன் முதலாக தானே பற்றி எரியும் தீக்குச்சிகளைக் கண்டு பிடித்தார்.
தொடர் நிகழ்வுகள் [தொகு]
இலங்கையின் பிரித்தானிய ஆளுனர்கள் [தொகு]
- சேர் தொமஸ் மெயிட்லண்ட் (1805)