பேச்சு:1805

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீரன் சின்னமலை குறுநில மன்னனா??அன்றைய காலகட்டத்தில் அது போன்ற பதவிகள் ஏதும் இல்லையே..முழுக்கட்டுபாடும் ஆங்கிலேயர் வசம் தானே இருந்தது.வேட்டுவ பட்டக்காரார்கள் மற்றும் பாளையக்காரர்கள் தான் வரி வசூல் செய்வது போன்ற பதவியில் இருந்தனர்.ஆங்கிலேயர்கள் வசம் சட்ட ஒழுங்கு மற்றும் காவல் துறை மட்டுமே இருந்தது மற்றபடி மக்களை பட்டக்காரர்கள் தான் ஆளுமை செய்தனர்.சரி அப்படியே அவர் குறுநில மன்னராகவே இருக்கட்டும் ஆனால் எந்த பகுதியின் குறுநில மன்னர் என்று கூறுங்கள்..

சின்னமலை குறுநில மன்னரா??!?[தொகு]

தீரன் சின்னமலை குறுநில மன்னன் என்பதற்கான ஆதாரத்தை இணைக்கவும் இல்லையேல் குறுநில மன்னன் என்ற வார்த்தையை நீக்கவும்.நீங்களே கூறி உள்ளீர்கள் இவர் தன்னை பாளையக்காரர்ராக அறிவித்துக்கொண்டு உண்மையான பாளையக்காரர்களை ஓர் அணியில் சேர்த்தார் என்று அப்படியானால் அவர் பாளையக்காரரும் இல்லை என்பது தெளிவாகிறது.அன்றைய காலகட்டத்தில் பட்டக்காரர் மற்றும் பாளையக்காரர் ஆட்சிதான் நடந்தது.ஆங்கிலேயரிடம் சட்ட ஒழுங்கும்,பட்டக்காரரிடம் மக்கள் ஆளுமையும் இருந்தது அங்கு எங்கு குறுநில மன்னன் வந்தார் அப்படியானால் அவர் எந்த பகுதி குறுநில மன்னன் ?விக்கிபீடியா உண்மையை மட்டுமே கூறும் என மக்கள் நம்புகின்றனர் அதை நிலை நாட்ட வேண்டுகோள் வைக்கிறேன்.


[1]Kongarmaganprem (பேச்சு) 00:05, 1 செப்டம்பர் 2015 (UTC)

குறுநில மன்னன் என்ற வார்த்தையை நீக்கவும்[தொகு]

நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரையில் பதில் ஏதும் தரப்படவில்லை இதற்கு மேலும் எனது கருத்திற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றால் தயவு செய்து குறுநில மன்னன் என்ற கருத்தை நீக்கி விக்கிபீடியாவின் உண்மை நிலையை நிலைநாட்ட வேண்டுகிறேன் நன்றி.

  1. http://www.itstamil.com/dheeran-chinnamalai.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:1805&oldid=1908136" இலிருந்து மீள்விக்கப்பட்டது