ஜூன் 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சூன் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||
| MMXIII | ||||||
ஜூன் 5 கிரிகோரியன் ஆண்டின் 156ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 157ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 209 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பூப் படைகளைத் தோற்கடித்து கிட்டத்தட்ட 1,000 பேரை சிறைப்பிடித்தனர்.
- 1900 - இரண்டாம் போவர் போர்: பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.
- 1912 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் கியூபாவில் இறங்கினர்.
- 1946 - சிக்காகோவில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
- 1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- 1959 - சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
- 1967 - இஸ்ரேலிய வான்படையினர் எகிப்து, ஜோர்தான், சிரியா ஆகியவற்றின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1968 - ஐக்கிய அமெரிக்காவின் அர்சுத் தலைவருக்கான வேட்பாளர் ரொபேர்ட் கென்னடி பாலஸ்தீனர் ஒருவனால் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.
- 1969 - அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.
- 1974 - ஈழப்போர்: சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.
- 1977 - செஷெல்சில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- 1977 - முதலாவது தனிக்கணினி அப்பிள் II விற்பனைக்கு விடப்பட்டது.
- 1979 - இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.
- 1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களின் பொற்கோயிலில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
பிறப்புகள் [தொகு]
- 1898 - ஃவெடரிக்கோ கார்சியா லோர்க்கா, ஸ்பானிய எழுத்தாளர் (இ. 1936)
- 1925 - வ. அ. இராசரத்தினம், ஈழத்து எழுத்தாளர்.
- 1975 - சிட்ருனாஸ் இல்கவுச்காஸ், லித்துவேனிய கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1910 - ஓ ஹென்றி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1862)
- 1974 - சிவகுமாரன், சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது ஈழப் போராளி (பி. 1950)
- 2002 - மு. சிவசிதம்பரம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்
- 2004 - ரோனால்டு ரேகன், அமெரிக்க முன்னாள் அதிபர் (பி. 1911)
- 2004 - கே. கணேஷ், எழுத்தாளர் (பி. 1920)
சிறப்பு நாள் [தொகு]
- உலக சுற்றுச்சூழல் நாள்
- டென்மார்க் - அரசியல் நிர்ணய நாள்
- சேஷெல்ஸ் - விடுதலை நாள்