செப்டம்பர் 21
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 21 கிரிகோரியன் ஆண்டின் 264வது நாளாகும். நெட்டாண்டுகளில் 265வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 101 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1792 - பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
- 1860 - இரண்டாம் ஓப்பியம் போர்: ஆங்கிலேய, பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத் தோற்கடித்தன்னர்.
- 1896 - பிரித்தானியப் படைகள் சூடானின் டொங்கோலா நகரைக் கைப்பற்றினர்.
- 1921 - ஜெர்மனியில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பெரும் வெடி விபத்தில் சிக்கி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
- 1934 - ஜப்பானில் மேற்கு ஹொன்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 3,036 பேர் கொல்லப்பட்டனர்.
- 1938 - நியூ யோர்க்கின் லோங் தீவில் சூறாவளி காரணமாக 500 முதல் 700 வரையானோர் கொல்லப்பட்டனர்.
- 1939 - ருமேனியாவின் பிரதமர் ஆர்மண்ட் கலினெஸ்கு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1942 - மேற்கு உக்ரைனில் 2500 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.
- 1964 - மோல்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1972 - பிலிப்பீன்ஸ் அதிபர் பேர்டினண்ட் மார்க்கொஸ் முழு நாட்டிலும் இராணுவ ஆட்சியைப் பிறப்பித்தார்.
- 1981 - பெலீஸ், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1989 - இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1990 - மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1991 - ஆர்மேனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1995 - விநாயகரின் சிலைகள் பால் குடிக்கும் அதிசயம் உலகின் பல இடங்களில் இடம்பெற்றது.
- 1999 - தாய்வானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர்.
- 2001 - நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டவாக 2,200 கிமீ தூரத்திற்குள் சென்றது.
- 2003 - கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது ஜுப்பிட்டர் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.
- 2004 - பூர்ஜ் துபாய் கட்டிட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- 1866 - எச். ஜி. வெல்ஸ், ஆங்கில எழுத்தாளர், (இ. 1946)
- 1909 - குவாமே நிக்ரூமா, கானா பிரதமர் (இ. 1972)
- 1954 - சின்சோ அபே, யப்பானிய அரசியல்வாதி
- 1957 - கெவின் ரட், ஆஸ்திரேலியாவின் 26வது பிரதமர்
- 1963 - கேட்லி அம்ப்ரோஸ், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பந்தாளர்
இறப்புகள் [தொகு]
- 1971 - பெர்னார்டோ ஹுசே, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- 1989 - ராஜினி திரணகம, இலங்கையின் மனித உரிமை மற்றும் பெண் உரிமை செயற்பாட்டாளர் (1954)
- 2007 - விஜயன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 2008 - டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் 4வது ஜனாதிபதி (பி. 1922)
சிறப்பு நாள் [தொகு]
- உலக அமைதி நாள்
- மோல்ட்டா - விடுதலை நாள் (1964)
- பெலீஸ் - விடுதலை நாள் (1981)
- ஆர்மேனியா - விடுதலை நாள் (1991)