பேர்டினண்ட் மார்க்கோஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேர்டினண்ட் மார்க்கொஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பேர்டினண்ட் எட்ராலின் மார்க்கோஸ் | |
![]() |
|
|
|
|
|---|---|
| பதவியில் டிசம்பர் 30, 1965 – பெப்ரவரி 25, 1986 |
|
| பிரதமர் | சேசார் விராட்டா (1981-1986) |
| உதவி தலைவர் | பெர்னாண்டோ லோப்பெஸ் (1965-1973) ஆர்த்தூரோ டொலெண்டீனோ (1986) |
| முன்னவர் | டியோஸ்டாடோ மக்கபாகல் |
| பின்வந்தவர் | கொரசோன் அக்கினோ |
|
பிலிப்பைன்சின் பிரதமர்
|
|
| பதவியில் ஜூன் 12, 1978 – ஜூன் 30, 1981 |
|
| பின்வந்தவர் | சேசார் விராட்டா |
|
அசெம்பிளி பிரதிநிதி
|
|
| பதவியில் ஜூன் 12, 1978 – ஜூன் 30, 1981 |
|
| அரசியல் கட்சி | லிபரல் கட்சி (1946-1965) தேசியக் கட்சி (1965-1978) கிலுசாங் பாகொங் லிப்புனான் (1978-1986) |
|
|
|
| பிறப்பு | செப்டம்பர் 11, 1917 பிலிப்பைன்ஸ் |
| இறப்பு | செப்டம்பர் 28 1989 (அகவை 72) ஹவாய், ஐக்கிய அமெரிக்கா |
| வாழ்க்கைத் துணை |
இமெல்டா மார்க்கோஸ் |
| தொழில் | சட்டத்தரணி |
| சமயம் | கத்தோலிக்கம் |
பேர்டினண்ட் எம்மானுவேல் எட்ராலீன் மார்க்கோஸ் (Ferdinand Emmanuel Edralín Marcos; செப்டம்பர் 11, 1917 – செப்டம்பர் 28, 1989) பிலிப்பைன்சின் குடியரசுத் தலைவராக 1965 முதல் 1986 வரை பதவி வகித்தவர். இவர் ஒரு சட்ட அறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது வடக்கு லூசோன் பகுதியில் கெரில்லாப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர். 1963 செனட் சபைக்குத் தலைவாரானார். இவரது ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் ஊழல், மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். 1986 இல் மக்களின் பெரும் எதிப்பைத் தொடர்ந்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தனது ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐக்கிய அமெரிக்காவில் முதலிட்டிருந்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
