யோம் கிப்பூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யோம் கிப்பூர் (எபிரேய மொழி: יוֹם כִּפּוּר, ஆங்கிலம்: Yom Kippur) யூதத்தின் மிக முக்கியமான, உள்ளார்ந்த நோன்பு ஆகும். கழுவாயும் வருத்தப்படுவதும் இந்த நாளின் முக்கிய கருப்பொருட்கள். உலகின் யூதர்கள் யோம் கிப்பூர் அன்று உண்ணாவிரதம் எடுத்து 25 மணி நேரங்களுக்கு கடவுளை வணங்குகின்றனர். ரோஷ் ஹஷானா முதல் யோம் கிப்பூர் வரை யூதத்தில் வருத்தப்படுவதற்காக பத்து நாட்கள் நடக்கின்றன.