ஏப்ரல் 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஏப்ரல் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||
| MMXIII | ||||||
ஏப்ரல் 8 கிரிகோரியன் ஆண்டின் 98ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 99ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 267 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 217 - ரோம் பேரரசின் மன்னன் கரகல்லா படுகொலை செய்யப்பட்டான்.
- 1767 - தாய்லாந்தின் அயுத்தயா பேரரசு பர்மியரிடம் வீழ்ந்தது.
- 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான்.
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.
- 1866 - ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிராக இத்தாலியும் புரூசியாவும் அணி திரண்டன.
- 1867 - முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆரம்பமானது.
- 1899 - மார்த்தா பிளேஸ் என்பவர் மின் இருக்கையில் மரண தண்டனை பெற்ற முதற் பெண்.
- 1919 - பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி டில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
- 1929 - டில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பத்துகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.
- 1950 - இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கட்-நேரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
- 1957 - எகிப்தில் சூயஸ் கால்வாய் மீளத்திறக்கப்பட்டது.
- 1973 - சைப்பிரசில் 32 குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.
- 1985 - போபால் அநர்த்தம்: போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.
- 2000 - அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
- 2004 - சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
பிறப்புகள்[தொகு]
- 1911 - மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1997)
- 1938 - கோபி அன்னான், நோபல் பரிசு பெற்ற முன்னாள் ஐக்கிய நாடுகள் அவைப் பொதுச் செயலர்
இறப்புகள்[தொகு]
- 1857 - மங்கள் பாண்டே, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படை வீரர் (பி. 1827)
- 1931 - எரிக் கார்ல்ஃபெல்ட், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1864)
- 1936 - ரொபேர்ட் பாரானி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1876)
- 1973 - பாப்லோ பிக்காசோ, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் (பி. 1881)
- 1984 - பியோத்தர் காப்பிட்சா, நோபல் பரிசு பெற்ற ரசியர் (பி. 1894)
- 1992 - டானியேல் போவெட், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1907)