பாப்லோ பிக்காசோ
| பாப்லோ பிக்காசோ Pablo Picasso |
|
![]() பாப்லோ பிக்காசோ 1962 |
|
| இயற்பெயர் | பாப்லோ டியேகோ ஓசே பிரான்சிசுக்கோஒ டி பௌலா உவான் நெப்போமுசெனோ மரியா டி லோசு ரெமெடியோசு சிப்பிரியானோ டி ல சான்ட்டிசிமா டிரினிடாட் ரூயீசு இ பிக்காசோ (Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso[1] |
| பிறப்பு | அக்டோபர் 25, 1881 மலகா, எசுப்பானியா |
| இறப்பு | ஏப்ரல் 8 1973 (அகவை 91) மூர்கி, பிரான்சு |
| நாடு | எசுப்பானியர் |
| துறை | நிறச்சாந்து ஓவியம், ஓவியம், சிலை, அச்சாக்கம், செராமிக்ஃசு |
| பயிற்சி | Jose Ruíz (father), Academy of Arts, Madrid |
| இயக்கம் | கியூபிசம் |
| படைப்புகள் | Les Demoiselles d'Avignon (1907) Guernica (1937) The Weeping Woman (1937) |
பாப்லோ பிக்காசோ (அக்டோபர் 25, 1881 – ஏப்ரல் 8, 1973) எசுப்பானியா நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜோர்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.அமைதிச்சின்னமான புறாவையும்,ஆலிவ் இலைகளையும் பிரபலப் படுத்தியவர் இவரே ஆகும்.
பொருளடக்கம் |
காலப்பகுப்பு [தொகு]
பிக்காசோவின் ஆக்கங்களைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். பிக்காசோவின் பிற்காலப் படைப்புக்கள் தொடர்பான இத்தகைய காலப்பகுதிகள் பற்றிச் சரியான இணக்கம் இல்லாவிட்டாலும், பின்வருவன பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்புக்களாகும்.
நீலக்காலப்பகுதி (1901-1904), இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நீலநிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. எசுப்பானியாவில் இவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், நண்பரொருவரின் இறப்பு ஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. கழைக் கூத்தாடிகள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர்.
ஆப்பிரிக்கச் செல்வாக்குக் காலப்பகுதி (1908-1909), ஆப்பிரிக்கக் கலைப் பொருட்களிலிருந்து கிடைத்த அகத் தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே இக்காலப்பகுதியில் இவரது படைப்புக்களில் முதன்மை பெற்றிருந்தன.
பகுப்பாய்வுக் கியூபிசம் (1909-1912), இது பிக்காசோவும், பிராக்கும் இணைந்து உருவாக்கிய ஓவியப் பாணியாகும். இந்த ஓவியங்கள் மண்ணிறத் தன்மை கொண்ட ஒரு நிற ஓவியங்களாக இருந்தன. இவ்வோவியங்களில் கருவாக அமைந்த பொருட்களை வடிவங்களின் அடிப்படையில் பிரித்தெடுத்து வரையும் பரிசோதனைகளாக அமைந்திருந்தன. இக்காலப் பகுதியில் இவ்விரு ஓவியர்களினதும் ஓவியங்கள் ஒன்றுபோலவே அமைந்திருந்தன.
தொடக்க காலம் [தொகு]
1881 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி, எசுப்பானியா (ஸ்பெயின்) நாட்டிலுள்ள மலகா (Málaga) என்னுமிடத்தில், பெற்றோருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார்.
